புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை


புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 16 Oct 2021 11:47 PM IST (Updated: 16 Oct 2021 11:47 PM IST)
t-max-icont-min-icon

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

பொள்ளாச்சி

புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

கடைசி சனிக்கிழமை

புரட்டாசி மாதம் பெருமாளுக்கு உகந்தது என்பார்கள். இதையொட்டி பக்தர்கள் நெற்றியில் நாமம் இட்டு விரதம் மேற்கொண்டு பெருமாளை வழிபடுவது வழக்கம். புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி ஆனைமலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ரங்கநாதபெருமாள் கோவிலில் அதிகாலை 5 மணிக்கு மகா கணபதி, சுதர்சன ஹோமம் உள்ளிட்ட 7 வகையான ஹோமங்கள் நடைநபெற்றது.

 பால், தயிர், திருமஞ்சனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னர் மல்லிகை, செவ்வந்தி உள்ளிட்ட 12 வகையான பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
பக்தர்கள் நெய் தீபம், எலுமிச்சை தீபம் ஏற்றி பெருமாளை வழிப்பட்டனர்.

 பக்தர்களுக்கு வளையல், குங்குமம் மற்றும் அன்னதானம், லட்டு ஆகியவை வழங்கப்பட்டன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். பொள்ளாச்சி டி.கோட்டாம்பட்டி கோதண்டராமர் கோவிலில் சீதாராமர் பட்டாபிஷேகத்தில், லட்சுமணன் குடை பிடிக்க, ஆஞ்சநேயர் சாமரம் வீசும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

கரிவரதராஜ பெருமாள் கோவில்

பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று காலை கோவில் நடை திறக்கப்பட்டு, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற வேண்டி தீபம் ஏற்றி வழிப்பட்டனர். பொள்ளாச்சி அருகே உள்ள சோமந்துறைசித்தூர் பாலாற்றங்கரை ஆஞ்சநேயர் கோவிலில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையை யொட்டி சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் செய்யப்பட்டது.

ஆஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர். இதையொட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

பாலக்காடு ரோட்டில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவில், குளத்துப்புதூர் பூமிநீளா சமேத வரதராஜ பெருமாள் கோவில், டி.கோட்டாம்பட்டியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் புரட்டாசி கடைசி சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


Next Story