கஞ்சா விற்றவர் கைது


கஞ்சா விற்றவர் கைது
x
தினத்தந்தி 16 Oct 2021 7:05 PM GMT (Updated: 16 Oct 2021 7:05 PM GMT)

கஞ்சா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

பணகுடி:

பணகுடி அருகே உள்ள சிவகாமிபுரத்தை சோ்ந்தவர் ராமையா (வயது 38). இவர் பணகுடி, காவல்கிணறு, வடக்கன்குளம் ஆகிய பகுதிகளில் சிறுவர்களிடம் கஞ்சா விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பணகுடி மெயின் ரோட்டில் கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

அதன்பேரில் பணகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்றுக் கொண்டு இருந்த ராமையாவை கைது செய்தனர். அவரிடம் இருந்து ½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Next Story