சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு


அரியலூர்
x
அரியலூர்
தினத்தந்தி 16 Oct 2021 8:32 PM GMT (Updated: 16 Oct 2021 8:32 PM GMT)

சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

உடையார்பாளையம்
உலகில் உள்ள அனைத்து பொதுமக்கள் நலம் பெற்று இருக்கவும், கொரோனா என்னும் பெரும்தொற்றில் இருந்து பொதுமக்களை காக்க வேண்டியும், ஸ்ரீ சாய் பாபாவின் 103-ம் ஆண்டு மகா சமாதி விழாவை முன்னிட்டும் உடையார்பாளையம் சேர்வைகாரர் தெருவில் உள்ள சாய்பாபா கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து
உடையார்பாளையம் பெரிய ஏரியில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக பால்குடம் எடுத்துக்கொண்டு பொதுமக்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர். பின்னர் சாய்பாபாவிற்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் வஸ்திரம் சாத்தப்பட்டு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை பாபா சக்திவேல் உள்பட பலர் செய்திருந்தனர்.

Next Story