சுத்தியலால் அடித்து டெய்லர் கொலை


சுத்தியலால் அடித்து டெய்லர் கொலை
x
தினத்தந்தி 17 Oct 2021 3:30 AM IST (Updated: 17 Oct 2021 3:30 AM IST)
t-max-icont-min-icon

கொட்டாம்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சுத்தியலால் அடித்து டெய்லர் கொலை செய்யப்பட்டார்.

கொட்டாம்பட்டி, 
 கொட்டாம்பட்டி அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் சுத்தியலால் அடித்து டெய்லர் கொலை செய்யப்பட்டார்.
தகராறு
மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி அருகே உள்ள காரியேந்தல்பட்டியை சேர்ந்தவர் முருகன். இவருடைய மகன் ரஜினிகாந்த் (வயது 43). டெய்லர் வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி சுமதி(37) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். 
இந்தநிலையில் அதே ஊரைச் சேர்ந்த முருகன் மகன் வீரபாண்டியும்(20), ரஜினிகாந்தும்  நேற்று முன்தினம் மாலையில் ஒன்றாக மது குடித்துள்ளனர். 
அப்போது 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. பின்னர் அங்கிருந்து 2 பேரும் சென்ற நிலையில் ஆத்திரம் தீராத வீரபாண்டி நள்ளிரவில் ரஜினிகாந்த் வீட்டிற்கு வந்துள்ளார்.
 அவரது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தனியாக தூங்கிக்கொண்டிருந்த ரஜினிகாந்தின் தலையில் வீரபாண்டி மறைத்து எடுத்துச்சென்ற சுத்தியலால் சரமாரியாக தலையில் அடித்து கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டார்.  
கைது
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கொட்டாம் பட்டி போலீசார், விரைந்து ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்த ரஜினிகாந்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பத்மநாபன் கொலை செய்த வீரபாண்டியை தேடிவந்தனர். 
இந்தநிலையில் நேற்று மணப்பச்சேரி விலக்கு அருகே பதுங்கி இருந்த வீரபாண்டியை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story