மாவட்ட செய்திகள்

குண்டர் சட்டத்தில் 10 ரவுடிகள் கைது + "||" + arrest

குண்டர் சட்டத்தில் 10 ரவுடிகள் கைது

குண்டர் சட்டத்தில் 10 ரவுடிகள் கைது
மதுரை புறநகரில் குண்டர் சட்டத்தில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மதுரை, 
மதுரை புறநகரில் குண்டர் சட்டத்தில் 10 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
உத்தரவு
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவுப்படி ரவுடிகளை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொது மக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் நபர்களை கண்டறிந்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
 இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய 10 ரவுடிகளை கண்டறிந்து அவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன், மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகருக்கு பரிந்து ரைத்தார். கலெக்டரின் உத்தரவின் பேரில் 10 ரவுடிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
கடும் நடவடிக்கை 
மேலும், கொலை வழக்குகள், சாதி ரீதியான கொலை வழக்குகள், பழிக்குபழியாக நடந்த கொலை வழக்குகளில் ஈடுபட்ட ரவுடிகளைக் கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது போல், தனிப்படையினரின் தேடுதலில் 78 நபர்கள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர். 66 நபர்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த அவர்களிடம் நன்னடத்தை பிணையம் பெறப்பட்டு உள்ளது. 
மேலும், பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
Related Tags :

தொடர்புடைய செய்திகள்

1. கொத்தனார் கைது
போக்சோ சட்டத்தில் கொத்தனார் கைது செய்யப்பட்டார்.
2. உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை தாக்கிய கொழுந்தனார் கைது
உல்லாசத்துக்கு மறுத்த பெண்ணை தாக்கிய கொழுந்தனார் கைது
3. கால்நடை டாக்டர் வீட்டில் பணம் திருடியவர் கைது
அந்தியூர் அருகே கால்நடை டாக்டர் வீட்டில் பணம் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
4. அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு; 15 வயது மாணவன் கைது
அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கி சூடு நடத்தி 3 மாணவர்களை கொன்ற சம்பவத்தில் 15 வயது மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
5. மாணவன் கொலை வழக்கில் 13 வயது சிறுவன் கைது
சிவகாசியில் மாணவன் கொலை வழக்கு தொடர்பாக 13 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.