வால்பாறை அருகே சத்துணவு கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்


வால்பாறை அருகே சத்துணவு கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்
x
தினத்தந்தி 17 Oct 2021 10:51 PM IST (Updated: 17 Oct 2021 10:51 PM IST)
t-max-icont-min-icon

வால்பாறை அருகே சத்துணவு கூடத்தை சேதப்படுத்திய காட்டு யானைகள்

வால்பாறை,

வால்பாறை அருகே உள்ள வரட்டுப்பாறை எஸ்டேட் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு பகுதிக்குள் நேற்று அதிகாலை 5 மணிக்கு 2 காட்டு யானைகள் புகுந்தது. 

தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சுற்று சுவரை சேதப்படுத்தி உள்ளே புகுந்தது. பின்னர் சத்துணவு கூடத்தை உடைத்து, அந்த அறையில் இருந்த அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தின்றும், வெளியே வீசியும் சேதப்படுத்தி அட்டகாசம் செய்தன. 

இதற்கிடையே காட்டு யானைகளை கண்ட பொதுமக்கள் சத்தம் எழுப்பி விரட்ட முயன்றனர். தொடர்ந்து யானைகள் வனப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் பூஜை பொருட்கள் வைக்கும் அறையை சேதப்படுத்திவிட்டு, வனப்பகுதிக்குள் சென்றன. 

தொடர்ந்து காட்டு யானைகள் அந்த பகுதியில் முகாமிட்டு வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். காட்டு யானைகளை கண்காணித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story