தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 17 Oct 2021 11:13 PM IST (Updated: 17 Oct 2021 11:13 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


குரங்குகள் தொல்லை 

கோத்தகிரியில் இருந்து கோடநாடு செல்லும் சாலைக்கு அருகே அம்பேத்கர் நகர் உள்ளது. இங்குள்ள வீடுகளில் ஏராளமான குரங்குகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன. சில நேரத்தில் பொருட்களையும் தூக்கி சென்று விடுகின்றன. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே கூண்டு வைத்து குரங்குகளை பிடித்து அவற்றை அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும்.
புஷ்பராஜ், கோத்தகிரி.

நடைபாதை ஆக்கிரமிப்பு

கோவை அவினாசி சாலை அண்ணாசிலையில் இருந்து ஹூசூர் செல்லும் சாலையின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் முட்செடிகள் ஆக்கிரமிப்பு அதிகளவில் உள்ளது. இதனால் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
குமார்,கோவை. 

கழிவுநீர் கால்வாய் தூர்வாரப்படுமா?

பந்தலூர் அருகே அம்பலமூலா பஜாரில் கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டது. அது இதுவரை தூர்வாரப்படவில்லை. இதனால் ஆங்காங்கே அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் தேங்கி நிற்பதால் கடும் துர்நாற்றம் வீசுவது டன், கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது. எனவே கழிவுநீர் கால்வாயை தூர்வார வேண்டும்.

  ராஜேந்திரன், அம்பலமூலா.

குப்பை தொட்டி தேவை

  கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் பின்புறம் ஏராளமான குடியிருப்புக்கள் உள்ளன. இப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ள குப்பைத்தொட்டி பழுதடைந்து சரிந்து கீழே சரிந்து கிடக்கிறது. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டுப்பன்றிகள், அவற்றில் புகுந்து குப்பைகளை கிளறுகிறது. இதனால் சாலை முழுவதும் குப்பைகள் பரவி சுகாதார சீர்கெடு ஏற்பட்டு வருகிறது. எனவே அங்கு புதிதாக குப்பை தொட்டி அமைக்க வேண்டும்.

  கருணாகரன், கோத்தகிரி.

சாக்கடை நீரால் அவதி 

  கோவை செல்வபுரம் சாஸ்தா நகர் சிறுவாணி கார்டன் தொடர்ச்சி பகுதியில் மழைநீருடன் சாக்கடை நீர் கலந்து சாலையில் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அங்கு துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து கழிவுநீரை அகற்ற வேண்டும்.

  அபு, செல்வபுரம்.

மின்விளக்குகள் ஒளிருமா?

  கோவை காந்திபுரம் மேம்பாலத்தில் மின்விளக்குகள் அமைக்கப் பட்டு உள்ளன. அதில் பல விளக்குகள் ஒளிரவில்லை. இதனால் அங்கு இருள் சூழ்ந்து இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதான மின்விளக்குகளை சரிசெய்ய வேண்டும்.

  ஆனந்தகுமார், கோவை.

குண்டும் குழியுமான சாலை

  கோவை காமராஜ் நகர் டி.வி.எஸ். நகர் பகுதியில் உள்ள சாலையில் ஜல்லி கற்கள் பெயர்க்கப்பட்டு 2 ஆண்டுகள் ஆகிறது. ஆனாலும் அங்கு தார்ச் சாலை அமைக்கப்பட வில்லை. இதனால் குண்டும், குழியுமாக இந்த சாலை காட்சி அளிப்பதால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே இங்கு தார் சாலை அமைக்க வேண்டும்.

  மனோகரன், காமராஜ் நகர்.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவை மாநகராட்சி 72-வது வார்டு தெலுங்குபாளையம், முத்தையா உடையார் வீதி, பெருமாள் கோவில் பின்புறம் சாலையோரம் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. தற்போது மழை பெய்து வருவதால், மழைநீருடன் குப்பைகள் கலந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அந்த குப்பைகளை அகற்ற வேண்டும்.

  பார்த்தசாரதி, தெலுங்குபாளையம்.

பழுதடைந்த சாலை

  கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையன்புதூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகே தார்சாலை பழுதடைந்து இருப்பதால் குண்டும் குழியுமான காட்சியளிக்கிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் கீழே விழுந்து படுகாயத்துடன் தப்பிச்செல்லும் நீடித்து வருகிறது. எனவே பழுதான அந்த சாலையை சீரமைக்க வேண்டும். 

  ராஜேஷ்குமார், நெம்பர் 10 முத்தூர்.

மின்விளக்குகள் தேவை

  கோவை -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் முள்ளுப்பாடி ரெயில்வே மேம்பாலம் கீழ்பகுதியில் சர்வீஸ் சாலை உள்ளது. இங்கு மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அங்கு உடனடியாக மின்விளக்குகள் அமைக்க வேண்டும்.

  சதீஷ்குமார், முள்ளுப்பாடி.

குப்பைகள் அகற்றப்படுமா?

  கோவை இருகூர் பேரூராட்சிக்கு உட்பட்ட அ.க.புதூர் சாலை யில் உள்ள சமுதாய நலக்கூடத்துக்கு அருகில் சாலையில் குப்பை கள் கொட்டப்படுகிறது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதால், அங்கு கிடக்கும் குப்பைகளை அகற்றுவதுடன், குப்பைகள் போட குப்பை தொட்டி வைக்க வேண்டும்.

  மனோகரன், இருகூர்.

வேகத்தடை குறித்த அறிவிப்பு

  கோவை மாநகர பகுதியில் முக்கிய சாலை சந்திப்புகளில் வேகத்தடை அமைக்கப்பட்டு உள்ளது. அதில் அவை குறித்து எச்சரிக்கை பலகையோ அல்லது வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணமோ பூசப்படவில்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரிவது இல்லை. இதன் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  சுரேஷ், கணபதி.



Next Story