சித்தூர் சித்தையா ஊரணியில் இறந்த நிலையில் 25 கிலோ எடை கொண்ட மீன் கரை ஒதுங்கியது


சித்தூர் சித்தையா ஊரணியில் இறந்த நிலையில்  25 கிலோ எடை கொண்ட மீன் கரை ஒதுங்கியது
x
தினத்தந்தி 17 Oct 2021 5:47 PM GMT (Updated: 17 Oct 2021 5:47 PM GMT)

சித்தூர் சித்தையா ஊரணியில் இறந்த நிலையில் 25 கிலோ எடை கொண்ட மீன் கரை ஒதுங்கியது.

காரையூர்:
புதுக்கோட்டை மாவட்டம்  காரையூர் அருகே சித்தூரில் சித்தையா ஊரணி உள்ளது. இந்த ஊரணி தண்ணீரை தான் அப்பகுதி பொதுமக்கள் குடிநீராக பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்று காலையில் குடிதண்ணீர் எடுப்பதற்காக பெண்கள் சென்றுள்ளனர். அப்போது சுமார் 25 கிலோ எடை கொண்ட மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தது. இதனை அறிந்த பெண்கள் அப்பகுதியில் உள்ள வாலிபர்களிடம் தகவல் தெரிவித்தனர். பின்னர் இறந்த மீனை வாலிபர்கள் கைப்பற்றி அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் புதைத்தனர். இந்த ஊரணி குடிதண்ணீர் ஊரணி என்பதனால் பொதுமக்கள் யாரும் மீன் பிடிக்கமாட்டார்கள். இதனால் இந்த ஊரணியில் மீன்கள் பெரிய மீன்களாக உள்ளது. பொதுவாக கடலில் தான் பெரிய அளவிலான மீன்கள் கிடைக்கும். ஆனால் ஊரணியில் 25 கிலோ மீன் கிடந்தது. அப்பகுதி மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

Next Story