ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
ஈரோட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
ஈரோடு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் மக்கள் கூடுவதற்கும், வழிபாடு நடத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது. கொரோனா பரவல் குறைந்ததையொட்டி வாரத்தின் அனைத்து நாட்களிலும் அனைத்து வழிபாட்டு தலங்களையும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடித்து வழிபாடு நடத்த கடந்த 14-ந்தேதி முதல் அரசு அனுமதித்தது.
இதைத்தொடர்ந்து ஈரோடு மாவட்டத்தில் கடந்த 15-ந் தேதி முதல் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் பிரார்த்தனை நடந்தது. இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடந்தது. அதன்படி ஈரோடு ஸ்டேட் வங்கி ரோட்டில் உள்ள புனித அமல அன்னை ஆலயத்தில், ஈரோடு மறை மாவட்ட முதன்மை குருவும், ஆலயத்தின் பங்கு தந்தையுமான ஜான் சேவியர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதேபோல் மீனாட்சி சுந்தரனார் ரோட்டில் உள்ள சி.எஸ்.ஐ. பிரப் நினைவு தேவாலயத்திலும் நேற்று கொரோனா விதிமுறைகளை பின்பற்றி சிறப்பு பிரார்த்தனை நடந்தது.
Related Tags :
Next Story