ஈரோடு மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை
ஈரோடு மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
ஈரோடு, அக்.18-
ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. பகலில் வெயில் அடித்தாலும் மாலை நேரத்தில் மழை பெய்து வந்தது. இந்த நிலையில் ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. அதன்படி ஈரோடு மாநகரில் நேற்று முன்தினம் பிற்பகல் 3 மணி அளவில் பெய்ய தொடங்கிய மழை சுமார் 30 நிமிடங்கள் பெய்தது. அதைத்தொடர்ந்தும் விட்டு விட்டு மழை பெய்தது.
இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது. பல்வேறு பகுதிகளில் ரோடு சேறும், சகதியுமாக காட்சி அளித்தது. வெண்டிப்பாளையம் மற்றும் கே.கே.நகர் ரெயில்வே நுழைவு பாலங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மழை காரணமாக ராஜாஜிபுரம் பகுதியில் மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் நேற்று காலை வரை பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
தாளவாடி - 41.6, சென்னிமலை - 41, அம்மாபேட்டை - 26, நம்பியூர் - 25, பவானி - 21, ஈரோடு - 16, பெருந்துறை - 14, கொடிவேரி - 13, வரட்டுப்பள்ளம் - 11, மொடக்குறிச்சி - 9, கவுந்தப்பாடி - 9, பவானிசாகர் - 8.2, குண்டேரிப்பள்ளம் - 4.6, கோபி - 4, சத்தியமங்கலம் - 4, கொடுமுடி - 1.8.
Related Tags :
Next Story