மும்பையில் கொரோனாவுக்கு ஒருவர் கூட உயிரிழக்கவில்லை
மும்பையில் கொரோனா பரவலுக்கு பிறகு முதல் முறையாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
மும்பை,
மும்பையில் கொரோனா பரவலுக்கு பிறகு முதல் முறையாக ஒருவர் கூட உயிரிழக்கவில்லை.
1,715 பேர் பாதிப்பு
மராட்டியத்தில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. இதில் நேற்று புதிதாக 1,715 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை 65 லட்சத்து 91 ஆயிரத்து 697 ஆக அதிகரித்து உள்ளது. இதேபோல மேலும் 2 ஆயிரத்து 680 பேர் குணமாகி உள்ளனர். இதுவரை 64 லட்சத்து 19 ஆயிரத்து 678 பேர் குணமாகி உள்ளனர். தற்போது மாநிலம் முழுவதும் 28 ஆயிரத்து 631 பேர் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆட்கொல்லி நோய்க்கு புதிதாக 29 பேர் பலியானார்கள். மொத்தம் 1 லட்சத்து 39 ஆயிரத்து 789 பேர் உயிரிழந்து உள்ளனர்.
உயிரிழப்பு இல்லை
தலைநகர் மும்பையில் புதிதாக 367 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்து 508 ஆக உயர்ந்து உள்ளது. அதே நேரத்தில் நகரில் நேற்று ஒருவர் கூட ஆட்கொல்லி நோய்க்கு பலியாகவில்லை. மும்பையில் கடந்த மார்ச் மாதம் முதல் ெகாரோனா பரவத் தொடங்கிய பிறகு, தொற்று பாதிப்புக்கு உயிரிழப்பு இல்லாமல் போனது இதுவே முதல் முறையாகும். எனவே மந்திரி ஆதித்ய தாக்கரே இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டு மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்.
நகரில் இதுவரை 16 ஆயிரத்து 180 பேர் உயிரிழந்து உள்ளனர். தொற்று பாதித்தவர்களில் 97 சதவீதம் பேர் குணமாகி உள்ளனர். நோய் பரவல் இரட்டிப்பாகும் காலம் 1,214 நாட்களாக உள்ளது. 50 கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story