சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்


சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்
x

சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிலாளர்கள் போராட்டம்

பந்தலூர்

பந்தலூர் அருகே சேரங்கோடு ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சம்பளம் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. எனவே நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வலியுறுத்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட தொழிலாளர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் சேரங்கோடு ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு கோரிக்கையை வலியுறுத்தி வருகிற 27-ந் தேதி கலெக்டர் அலுவலகம் மற்றும் கூடலூர் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்துவிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 


Next Story