கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கோவை
தென்னை நலவாரியம் அமைக்கக்கோரி கோவையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
விவசாயிகள் நலனை பாதுகாக்க தென்னை நலவாரியம் அமைக்க வேண்டும், பொள்ளாச்சியை மையமாக வைத்து தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கோவை மாவட்டக்குழு தலைவர் சு.பழனிச்சாமி தலைமை தாங்கினார். பெரியசாமி, பழனிச் சாமி, மூர்த்தி, தங்கவேல், ஈஸ்வர மூர்த்தி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள்.
இது குறித்து சு.பழனிசாமி கூறியதாவது:-
தென்னை நலவாரியம்
கோவை மாவட்டத்தில் தேங்காயை மையப்படுத்தி தேங்காய் எண் ணெய் தயாரித்தல், மட்டை கம்பெனி, கயிறு தொழிற்சாலை, நீரா பானம், இளநீர், தேங்காய் தொட்டி, தேங்காயை பதப்படுத்தி கூட்டு தின்பண்டங்கள் போன்றவை தயாரிக்க விவசாயிகளிடம் இருந்து தேங்காய், இளநீர், மட்டை மற்றும் தேங்காய் எடுத்த காலித்தொட்டி போன்ற பொருட்கள் வாங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை காரணம் காட்டி மேற்கண்ட தொழில் நிறுவனங்கள் முடக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் விவசாயிகள் உற்பத்தி செய்யும் தேங்காய் தொட்டி, தேங்காய் மட்டை ஆகிய பொருட்கள் தேக்கம் அடைந்து உள்ளதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே இதுபோன்ற பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு உடனடியாக தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story