தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 18 Oct 2021 10:04 PM IST (Updated: 18 Oct 2021 10:04 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


போக்குவரத்துக்கு இடையூறு

  கோத்தகிரி காமராஜர் சதுக்கம் அருகே 2 தனியார் பள்ளிகள் உள் ளன. இந்த பள்ளிக்கு வருபவர்கள் தங்கள் வாகனங்களை நிறுத்த நடைபாதை மேம்பாலத்துக்கு அருகே இடம் ஒதுக்கப்பட்டு உள்ளது. ஆனால் அங்கு தற்காலிக கடைகள் இருப்பதால் பள்ளி அருகே வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே போக்குவரத்துக்கு இடையூராக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.
  பெலிக்ஸ், கோத்தகிரி.

குடிநீர் வேண்டும்

  பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியம் சின்னாம்பாளையம் ஆர்.டி.ஓ. அலுவலகம் எதிரில் ராம்ஸ் நகர் பகுதியில் குடிநீர் வினியோகம் சீராக வழங்குவது இல்லை. 7 நாட்கள் முதல் 14 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
  சுரேந்திரநாதன், சின்னாம்பாளையம்.

கழிவறை சுத்தம் செய்யப்படுமா?

  கோவை ராமநாதபுரம் 68-வது வார்டில் பொதுக் கழிப்பறை உள்ளது. இது முறையாக சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதனால் அருகில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. இதன் காரணமாக சுகாதார சீர்கேடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே இந்த கழிவறையை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  காந்தி, ராமநாதபுரம்.

ஆபத்தான மின்கம்பம்

  கோவை குனியமுத்தூர் இடையார்பாளையம் மெயின் ரோட்டில் உள்ள மின் கம்பங்கள் மிகவும் சிதிலமடைந்து உள்ளன. அத்துடன் கம்பத்தில் உள்ள சிமெண்டு காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே நீட்டிக்கொண்டு இருக்கிறது. இதனால் இந்த மின்கம்பங்கள் கீழே விழுந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பங்களை உடனடியாக மாற்ற வேண்டும்.
  ரவி, இடையர்பாளையம்.

கிழிந்து போன இருக்கை 

  கோவையில் இருந்து கரூருக்கு இயக்கப்பட்டு வரும் (வண்டி எண் த.நா. என்.3247) என்ற அரசு பஸ்சில் இருக்கைகள் கிழிந்து இருக்க முடியாத நிலையில் உள்ளது. இதனால் இந்த பஸ்சில் பயணம் செய்யும் பயணிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அரசு பஸ்சில் கிழிந்த நிலையில் உள்ள இருக்கைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  மணிமாறன், கோவை.

குப்பையால் சுகாதார சீர்கேடு 

  கோவை செல்வபுரம் அருள் கார்டன் பகுதியில் குப்பைகள் சரிவர சுத்தம் செய்யப்படுவது இல்லை. இதன் காரணமாக அங்கு குப்பைகள் மலைபோன்று குவிந்து கிடக்கிறது. அத்துடன் தற்போது பெய்த மழை காரணமாக குப்பையில் தண்ணீர் தேங்கி, அருகில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அருகில் உள்ள சாக்கடை கால்வாயிலும் அடைப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை சுத்தம் செய்வதுடன், சாக்கடையில் உள்ள அடைப்புகளை சரிசெய்ய வேண்டும்.
  முகமது ஹனீபா, செல்வபுரம்.

தெரு விளக்குகள் ஒளிருமா?

  கோவை மாநகராட்சி 41-வது வார்டு கணபதி மாநகர் பண்ணாரி யம்மன் கோவில் அருகில் எஸ்.ஆர்.வி. நகரில் தெருவிளக்குகள் கடந்த சில நாட்களாக சரியாக ஒளிருவது இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்களும் அவ்வழியே செல்பவர்களும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து, ஒளிராமல் இருக்கும் மின்விளக்குகளை ஒளிர வைக்க வேண்டும்.
  ராஜமாணிக்கம், எஸ்.ஆர்.வி. நகர்.

பழுதான தார்சாலை

  கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம் முதல் மையிலேரி பாளையம் வரை செல்லும் தார் சாலை பழுதடைந்த நிலையில் உள் ளது. இதனால் இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி யடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர் கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயங்களுடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே பழுதான இந்த தார்சாலையை சரி செய்ய வேண்டும்.
  கருப்பசாமி. அரசம்பாளையம்.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

  கிணத்துக்கடவு பகுதியில் உள்ள 4 வழிச்சாலை ஓரத்தில் மழைநீர் செல்ல வடிகால் வசதி உள்ளது. இங்கு தூர்வாரப்படாததால் அதற்குள் கழிவுநீர் தேங்கி நிற்பதால், துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லை யும் அதிகமாக உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மழைநீர் வடிகாலில் கழிவுநீர் தேங்காத வகையில் அதை தூர்வார வேண்டும்.
  ராதாகிருஷ்ணன், கிணத்துக்கடவு.

தேங்கி கிடக்கும் குப்பைகள்

  கோவை பீளமேடு மேம்பாலத்தில் இருந்து காந்திமாநகர் செல்லும் வழியில் சாலையோரத்தில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதனால் அங்கு குவியும் தெருநாய்கள் அவற்றை இழுத்து சாலையில் போட்டுவிடுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு தேங்கி கிடக்கும் குப்பையை உடனடியாக அகற்ற வேண்டும்.
  ராஜ், காந்திமாநகர்.



Next Story