வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் பிணமாக மீட்பு
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண் பிணமாக மீட்பு
பேரூர்
பேரூர் அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட பெண்ணின் உடல் 3 நாளுக்கு பிறகு சென்னனூர் குட்டையில் மீட்கப்பட்டது.
வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்
பேரூர் அருகே உள்ள தென்கரை கிராமம், அம்பேத்கர் காலனியைச் சேர்ந்தவர் மருதன். இவரது, மனைவி விஜயா (வயது 55). இவர் கடந்த 16-ந் தேதி அதே பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரின் தோட்டத்தில் கூலி வேலைக்கு சென்றார்.
பின்னர் அன்று மதியம் வேலை முடிந்து ஒருசிலருடன் விஜயா வீடு திரும்பினார். அப்போது திடீரென்று கனமழை கொட்டியது. இதனால் அந்த தோட்டத்தின் அருகே உள்ள ஓடையில் தண்ணீர் கரைபுரண்டு ஓடியது. அப்போது விஜயா, அந்த ஓடையை கடக்க முயன்றபோது, திடீரென்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டார்.
3 நாளுக்கு பிறகு உடல் மீட்பு
இது குறித்த தகவலின்பேரில் பேரூர் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விஜயாவை தேடினார்கள். அந்த ஓடையில் உள்ள தடுப் பணை மற்றும் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டை நடந்தது.
இந்த நிலையில் 3-வது நாளாக தேடுதல் பணி நடந்தது. அப்போது சென்னனூர் குட்டையில் விஜயா பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் அங்கு சென்று விஜயாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story