நகை திருடியவர் கைது
திருட்டு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டன.
கோவை
திருட்டு வழக்கில் சிறை சென்று ஜாமீனில் வந்து நகை திருடியவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து ரூ.4 லட்சம் பொருட்கள் மீட்கப்பட்டன.
போலீசார் ரோந்து
தீபாவளி பண்டிகையொட்டி கோவை காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, ஒப்பணக்கார வீதி உள்ளிட்ட இடங்களில் பொது மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது.
இந்த கூட்டத்தை பயன்படுத்தி நகை, பணம் திருடுபவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த தனிப்படையை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் தலைமை காவலர்கள் உமா, கார்த்திக், பூபதி ஆகியோர் கோவை ராஜவீதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
ஒருவரை பிடித்து விசாரணை
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்த ஒருவரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர், முன்னுக்கு பின் முரணான பதிலை தெரிவித்தார். அத்துடன் அவர் வைத்திருந்த பையில் நகை மற்றும் வெள்ளி பொருட்கள் இருந்தன.
இதனால் போலீசார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தியதில் மதுரை கோரிபாளையத்தை சேர்ந்த செல்வராஜ் (வயது 28) என்பதும் செல்வபரத்தில் உள்ள ஒரு வீட்டில் திருடிய நகை மற்றும் வெள்ளி பொருட்களை விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.
வாலிபர் கைது
இதையடுத்து போலீசார் அந்த நபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்த 10 பவுன் தங்க நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மீட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.4 லட்சம் ஆகும்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்வராஜ் கடந்த மாதம் 15-ந் தேதி செல்வபுரத்தில் ஒரு வீட்டில் 20 பவுன் நகையை திருடி கைது செய்யப்பட்டு சிறை ெசன்று கடந்த வாரத்தில்தான் ஜாமீனில் வெளியே வந்ததும், அதன் பின்னர், மீண்டும் தற்போது நகை திருடியது தெரிய வந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story