தென்னை நல வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தென்னை நல வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 18 Oct 2021 10:39 PM IST (Updated: 18 Oct 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

தென்னை நல வாரியம் அமைக்க கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி சப்-கலெக்டர் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 இதற்கு மாவட்ட தலைவர் பழனிசாமி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், தென்னையை பாதிக்கும் நோயை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

பசுமை தீர்ப்பாயத்தின் தீர்ப்பை காரணம் காட்டி தென்னை சார்ந்த தொழிலை நசுக்க கூடாது. விவசாயிகளின் நலனை பாதுகாக்க தென்னை நல வாரியம் அமைக்க வேண்டும். 

பொள்ளாச்சியை மையமாக கொண்டு தேங்காய் கொள்முதல் மையம் அமைக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதில் மாவட்ட துணை தலைவர் பெரியசாமி மற்றும் விவசாய சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story