சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஒரே நாளில் 2,250 பேருக்கு கொரோனா தடுப்பூசி


சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஒரே நாளில் 2,250 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 18 Oct 2021 10:39 PM IST (Updated: 18 Oct 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் ஒரே நாளில் 2,250 பேருக்கு கொரோனா தடுப்பூசி

சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தடுப்பூசி போடும் பணியை ஒன்றியம் முழுவதும் தீவிரப்படுத்தி உள்ளனர். 

நேற்று போகம்பட்டி, கள்ளப்பாளையம், ஜல்லிபட்டி, வதம்பச்சேரி, ஜே. கிருஷ்ணாபுரம் உள்பட 5 இடங்களிலும், சந்திராபுரம், வதம்பச்சேரி ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. இந்த முகாம்களில் மொத்தம் 2 ஆயிரத்து 250 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. 

இதற்கான பணிகளில் டாக்டர்கள் கிருஷ்ணபிரபு, பவித்ரா, சபரி ராம், சுந்தர் மற்றும் செவிலியர்கள் ஈடுபட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அதிகாரி டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்பட பலர் செய்து இருந்தனர்.

Next Story