காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம்
காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
திருச்சி, அக்.19-
காதல் திருமணம் செய்த மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டரிடம் பெற்றோர் மனு அளித்துள்ளனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர். சிவராசு தலைமை தாங்கினார். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுத்தனர்.
ஸ்ரீரங்கம் கீழ அடையவளஞ்சான் பகுதியைச் சேர்ந்த வணிகவரித்துறை ஓய்வு பெற்ற அலுவலர் அமிர்தலிங்கம் தனது மனைவி விஜயலட்சுமி உடன் வந்து கொடுத்த மனுவில், எனது மகள் ரம்யா ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் குமரகுருபரன் என்பவரை கடந்த 2010-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். ரம்யா கடந்த மாதம் 15-ந்தேதி கணவருடன் சண்டை போட்டுக்கொண்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். என் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இது பற்றி விசாரணை நடத்தி எனது மகளின் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
குழந்தைகளை கண்டுபிடித்து தர கோரி...
திருச்சி ராம்ஜி நகர் பகுதியைச் சேர்ந்த கானியம்மாள் (62) கொடுத்த மனுவில், எனக்கு 2 குழந்தைகள் உள்ளனர். எனது கணவர் இறந்ததால் வறுமைகாரணமாக குழந்தைகளை வளர்க்க சிரமப்பட்டேன். இந்த நிலையில் டாக்டர் ஒருவரின் உதவியுடன் எனது குழந்தைகளை 1980-ம் ஆண்டு மதுரையில் உள்ள ஒரு குழந்தைகள் ஆசிரமத்தில் விட்டுவிட்டு சென்றேன். பின்னர் என் குழந்தைகளை பார்க்கச் சென்றபோது அவர்களை அடிக்கடி பார்க்க வரக்கூடாது என்று கூறி அனுப்பி விட்டார்கள். தற்போது அந்த ஆசிரமம் அங்கு செயல்பட வில்லை. 40 வருடங்களாக எனது குழந்தைகளை தேடி வருகிறேன். எனவே எனது குழந்தைகளை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
அப்பர் உழவாரப்பணிக்குழு அறக்கட்டளை சார்பாக கொடுத்த மனுவில், துறையூர் மகா சம்பத்கவுரி உடனுறை நந்திகேஸ்வரர் கோவிலில் உள்ள 2 தேர்கள் சீரமைக்கப்படாமல் உள்ளது. இதே போல் துறையூர் காசி விசலாட்சி உடனுறை காசிவிஸ்வநாதர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்தப்படாமல் உள்ளது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
இலவச வீட்டுமனை பட்டா
காட்டூர், அரியமங்கலம், பாப்பாகுறிச்சி, பிரியா நகர், வீதி வடங்கம், காமராஜ் நகர், திருவெறும்பூர் ஆகிய பகுதிகளில் இருந்து 60-க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு கலெக்டரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
திருச்சி பாப்பாகுறிச்சி, காட்டூர், கொக்கரசன் பேட்டை, எல்லக்குடிஅகரம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கொடுத்த மனுவில், பண்டாரத்தான் குழுமி கரை கடை மடை பகுதியில் தூர்வார வேண்டும் என்று கூறியிருந்தனர்.
திருச்சி நவல்பட்டு கிராம தலைவர் சேட்டு, திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் ராஜேந்திரன் மற்றும் கிராம மக்கள் கொடுத்த மனுவில், கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு மாவட்ட கலெக்டர், கோட்டாட்சியர் முன்னிலையில் நடந்தது. இதேபோல் இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தரவேண்டும் என்று கூறியுள்ளனர்.

Related Tags :
Next Story