திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.
திருவள்ளூர்,
திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் வேலைவாய்ப்பு, கடனுதவி, வீட்டுமனைப்பட்டா, தொகுப்பு வீடுகள், ஆக்கிரமிப்புகள் அகற்றம் என்பது உள்ளிட்ட 382 மனுக்களை அளித்தனர்.
மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதைத்தொடர்ந்து கலெக்டர் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டார்
மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்து அவரிடமிருந்து மனுக்களை பெற்றார்.
பின்னர் அவர் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.76 ஆயிரத்து 500 வீதம் 3 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் மொபட்டுகள் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, பயிற்சி உதவி கலெக்டர் அனாமிகா ரமேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்கள் வித்யா, ஜோதி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story