அரசு பள்ளி கொடிக்கம்பத்தில் வாளியை தொங்கவிட்ட மர்மநபர்கள்
அரசு பள்ளி கொடிக்கம்பத்தில் வாளியை தொங்கவிட்ட மர்மநபர்கள்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே கோடங்கிபாளையத்தில் உள்ள அரசு பள்ளிக்கூட கொடிக்கம்பத்தில் மர்மநபர்கள் வாளியை தொங்கவிட்டு சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொடிக்கம்பத்தில் தொங்கிய வாளி
கிணத்துக்கடவு அருகே கோடங்கிபாளையத்தில் மாரியம்மன் கோவில் அருகில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கூடம் உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டுள்ளது.
இதனால் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் உட்பட ஆசிரியர்கள் மட்டும் அவ்வப்போது வந்து செல்கின்றனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் உள்ள கொடிக்கம்பத்தில் மர்மநபர்கள் வாளியை கட்டி தொங்க விட்டு உள்ளனர். மேலும் பள்ளி வளாகத்தில் உள்ள கல்வெட்டு, பள்ளி சுவர்களில் சகதியை வீசிச்சென்று உள்ளனர். பள்ளி வளாகத்தில் உள்ள குடிநீர் உள்ளிட்ட பலவற்றை சேதம் செய்து உள்ளனர்.
அதிர்ச்சி
நேற்று பள்ளிக்கு வந்த பள்ளி தலைமை ஆசிரியர் கொடிக்கம்பத்தில் வாளி தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து கொடிக்கம்பத்தில் வாளி தொங்குவதை பார்த்து வேதனை அடைந்தனர்.
இதுபற்றி அறிந்ததும் ஊராட்சி நிர்வாகிகள் மற்றும் கிணத்துக்கடவு போலீசார் அங்கு சென்று பள்ளி வளாகத்தை பார்வையிட்டனர். மேலும் போலீசார், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களிடம் விசாரணை நடத்தினர். பள்ளியில் கொடிக்கம்பத்தில் வாளியை கட்டி தொங்கவிட்ட மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
தேசியக்கொடி கட்டப்படும் கொடிக்கம்பத்தில் மர்மநபர்கள் வாளியை கட்டி தொங்கவிட்டு அவமதிப்பு ஏற்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story