செவ்வாழை தாரில் 4 நிறங்களில் பழங்கள்
செவ்வாழை தாரில் 4 நிறங்களில் பழங்கள்
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி ரோட்டில் மளிகைகடை நடத்தி வருபவர் ராமச்சந்திரன். இவரது மளிகைகடையில் காய்கறி மற்றும் வாழை பழங்களும் விற்பனை செய்து வருகிறார். நேற்றுமுன்தினம் கிணத்துக்கடவு தினசரி காய்கறி சந்தையில் இருந்து செவ்வாழை தார் ஒன்று ராமச்சந்திரனின் கடைக்கு விற்பனைக்காக வந்தது. அந்த தாரை அவர் வாங்கினார்.
அப்போது செவ்வாழை தார் பச்சை, மஞ்சள், சிவப்பு உள்ளிட்ட 4 நிறங்களில் இருந்தது. இதனை கடை உரிமையாளர் விற்பனைக்காக அங்கு தொங்க விட்டு இருந்தார்.
செவ்வாழை தாரில் மஞ்சள், செந்நிரம், பச்சை, கருஞ்சிவப்பு என 4 கலரில் செவ்வாழை காணப்படுவதால் இந்த வாழைதாரை அங்கு வந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச்சென்றனர்.
Related Tags :
Next Story