கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்

கொரோனா பரவல் அதிகரிக்கும் அபாயம்
சுல்தான்பேட்டை
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் வாரப்பட்டி, வதம்பச்சேரி, குமாரபாளையம், அய்யம்பாளையம் உள்பட மொத்தம் 20 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சுமார் ஒரு லட்சம் பேர் வசித்து வருகின்றனர். ஊராட்சிகளில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை, ஒன்றிய, ஊராட்சி நிர்வாகங்கள் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. அதன்படி ஊராட்சிகளில் முகக் கவசம் அணியாமல் வெளியே நடமாடுபவர்கள், சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருப்பவர்களை கண்டறிந்து அபராதம் விதிக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில், கடந்த சில வாரங்களாக அபராதம் விதிக்கும் பணி ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டும் கண்துடைப்பாக நடந்து வருகிறது. இதனால், ஒன்றியத்தில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற செயல்மிகவும் குறைந்து வருகிறது. 10-க்கு 4 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா விதிமுறைகளை கடைப்பிடிக்கின்றனர். இதனால், கட்டுக்குள் உள்ள கொரோனா பரவல் சற்று அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. இதே நிலைதான் பொள்ளாச்சி, ஆனைமலை, ஆழியாறு, கோட்டூர் பகுதிகளிலும் நீடிக்கிறது.
கெடுபிடிகள் குறைந்ததால் பொதுமக்கள் ஆபத்தை உணராமல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மதிக்காமல் உள்ளார்கள். எனவே அதிகாரிகள் மீண்டும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
Related Tags :
Next Story