கோவையில் மிலாது நபி கொண்டாட்டம்


கோவையில் மிலாது நபி கொண்டாட்டம்
x
தினத்தந்தி 19 Oct 2021 10:23 PM IST (Updated: 19 Oct 2021 10:23 PM IST)
t-max-icont-min-icon

கோவையில் மிலாது நபி கொண்டாட்டம்

கோவை

இறைதூதர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள், மிலாது நபி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இதன்படி  மிலாது நபி கோவை புல்லுக்காடு, குனியமுத்தூர் உள்பட பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. கோவை புல்லுக்காடு பகுதியில் உள்ள அரபி பாடசாலையான மதரசாக்களில் குரான் படிக்கும் மாணவ- மாணவிகளின் ஊர்வலம் நடைபெற்றது. 

மாணவர்கள் தாளத்துடன் பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர். மேலும் சில மாணவர்கள் நடனமாடியபடி பாட்டு பாடினர். ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவர்களுக்கு அந்த பகுதி பொதுமக்கள் பரிசுகள் வழங்கி மகிழ்ந்தனர். இதனை தொடர்ந்து மதியம் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது. 

ஊர்வலத்தின் போது நபிகள் நாயகத்தின் பொன்மொழிகள், 5 வேளை தொழுகையின் முக்கியத்துவம், பிறருக்கு உதவும் ஈகையின் முக்கியத் துவம் ஆகியவை குறித்து மாணவர்கள் எடுத்து கூறினர். இதில் அந்த பகுதியை சேர்ந்த ஜமாத்தார்கள், மதரசா ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story