இந்து முன்னணியினர் நூதன போராட்டம்
கோவில் நகையை உருக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை
கோவில் நகையை உருக்க எதிர்ப்பு தெரிவித்து கோவையில் இந்து முன்னணியினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நூதன போராட்டம்
தமிழக அரசு கோவிலில் உள்ள பயன்படுத்தப்படாத நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்ற முடிவு செய்து உள்ளது. இதற்கு இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் இந்து முன்னணி சார்பில் கோவில் நகைகளை உருக்க எதிர்ப்பு தெரிவித்து பிரசார யாத்திரை நிகழ்ச்சி கோவையில் உள்ள கோனியம்மன் கோவிலில் நடைபெற்றது.
இதில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் அம்மனி டம் முறையீட்டு மனு வைத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அந்த பகுதி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கினர்.
பின்னர் காடேஸ்வரா சுப்பிரமணியம் நிருபர்களிடம் கூறியதாவது:-
வெள்ளை அறிக்கை
கடந்த 1977-ம் ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் உள்ள கோவில் களில் இருந்து 5 லட்சம் தங்க நகை உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
மேலும் இதுவரை எவ்வளவு நகை உருக்கப்பட்டு தங்க கட்டிகளாக மாற்றி வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு உள்ளது. அதன்மூலம் எவ்வளவு வருமானம் கிடைத்து உள்ளது என்பதை அரசு விளக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து மனுநீதி சோழன் கதையை நினைவு கூறும் வகையில் தங்க நகையை உருக்க எதிர்ப்பு தெரிவித்து அம்மன் முன் கட்டப்பட்டிருந்த மணியை மாடு அடிப்பது போல் செய்து காண்பித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் மாநில செயலாளர் கிஷோர், மாவட்ட தலைவர் தசரதன், கோட்ட செயலாளர் சதிஷ், ஜெய்சங்கர் செய்தி தொடர்பாளர் தனபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story