பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராகிம் கைது


பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராகிம் கைது
x
தினத்தந்தி 19 Oct 2021 7:27 PM GMT (Updated: 19 Oct 2021 7:27 PM GMT)

மதுரை கோரிப்பாளையம் தர்காவுக்கு செல்ல முயன்ற பா.ஜ.க. சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் இப்ராகிம் கைது செய்யப்பட்டார்.

மதுரை, 

பா.ஜ.க.வின் தேசிய சிறுபான்மை பிரிவு செயலாளராக இருப்பவர் வேலூர் இப்ராகிம். இவர் நேற்று மதுரைக்கு வந்து மாவட்ட கோர்ட்டு அருகே உள்ள ஒரு ஓட்டலில் தங்கியிருந்தார். பின்னர் அவர், கோரிப்பாளையத்தில் உள்ள தர்காவிற்கு செல்ல உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் அண்ணாநகர் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் வேலூர் இப்ராகிம் தர்காவிற்கு சென்றால் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்தனர். அதையும் மீறி அவர் உள்ளிட்ட பா.ஜ.க. சிறுபான்மை அணியின் மாநில செயலாளர் கல்வாரி தியாகராஜன், மாவட்ட தலைவர் செரில் ராயப்பன், அப்துல் ஹமீது, ஜூடு ஜோசப், மாரிச்செல்வம், வெங்கடேஷ், கார் விஜய்கண்ணன், கந்தசாமி ஆகியோர் ஓட்டலில் இருந்து புறப்பட முயன்றனர். எனவே வேலூர் இப்ராகிம் உள்பட அவர்கள் அனைவரையும் அண்ணாநகர் போலீசார் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.


Next Story