பெரியபெருமாள் கோவிலில் புஷ்பயாகம்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் பெரிய பெருமாள் கோவிலில் புஷ்பயாகம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் வளாகத்தில் பெரிய பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நிறைவடைந்த பின்னர் 108 மலர்களால் புஷ்ப யாகம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் கடந்த சில தினங்களுக்கு பெரிய பெருமாள் பிரம்மோற்சவம் நிறைவடைந்ததை முன்னிட்டு நேற்று கோவில் வளாகத்தில் பெரிய பெருமாள், பூமாதேவி, ஸ்ரீதேவி ஆகியோருக்கு புஷ்பயாகம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியையொட்டி பெரிய பெருமாள், பூதேவி, ஸ்ரீதேவி ஆகியோர் சர்வ அலங்காரத்தில் காட்சி அளித்தனர். புஷ்ப யாகத்திற்காக 108 வகையான மலர்கள் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. புஷ்பயாகம் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு முன்னர் அந்த 108 வகையான மலர்களால் கோவில் வளாகத்தில் அத்தப்பூ கோலம் போல வரையப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story