ஆபத்தான மின்கம்பம்
மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி செங்கோடகவுண்டன்புதூர் வழியாக மலையம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள மின் கம்பம் எலும்புக்கூடாக ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது.
மொடக்குறிச்சியை அடுத்த ஈஞ்சம்பள்ளி செங்கோடகவுண்டன்புதூர் வழியாக மலையம்பாளையம் செல்லும் ரோட்டில் உள்ள மின் கம்பம் எலும்புக்கூடாக ஆபத்தான நிலையில் காட்சி அளிக்கிறது. மேலும் அந்த மின் கம்பத்தில் இருந்து மின் கம்பிகள் தொங்கி கொண்டு உள்ளன. தற்போது மழைக்காலம் என்பதால் தொங்கி கொண்டிருக்கும் மின் கம்பி மூலம் மின் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் எலும்புக்கூடாக உள்ள மின் கம்பம் சாய்ந்து விழவும் வாய்ப்பு உள்ளது. எனவே ஏதாவது அசம்பாவித சம்பவம் ஏற்படுவதற்கு முன் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆபத்தான மின் கம்பத்தையும், தொங்கி கொண்டிருக்கும் மின் கம்பியையும் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Related Tags :
Next Story