‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சித்தாரில் வாடகை கட்டிடத்தில் தற்காலிக ரேஷன் கடை அமைப்பு; உணவுப்பொருட்கள் வினியோகித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி


‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி: சித்தாரில் வாடகை கட்டிடத்தில் தற்காலிக ரேஷன் கடை அமைப்பு; உணவுப்பொருட்கள் வினியோகித்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 20 Oct 2021 2:49 AM IST (Updated: 20 Oct 2021 2:49 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிெராலியால் சித்தாரில் வாடகை கட்டிடத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை அமைக்கப்பட்டது. மேலும் அந்த கடை மூலம், உணவுப்பொருட்களும் உடனடியாக வினியோகிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அம்மாபேட்டை
‘தினத்தந்தி’ செய்தி எதிெராலியால் சித்தாரில் வாடகை கட்டிடத்தில் தற்காலிகமாக ரேஷன் கடை அமைக்கப்பட்டது. மேலும் அந்த கடை மூலம், உணவுப்பொருட்களும் உடனடியாக வினியோகிக்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  
சேறும், சகதியுமாக மாறிய ரோடு
அம்மாபேட்டை அருகே சித்தாரில் சொக்கநாச்சி அம்மன் நகர் உள்ளது. இங்கு ரேஷன் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் அந்த பகுதியை சேர்ந்த 759 குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் பொருட்களை வாங்கி வருகிறார்கள். 
இந்த ரேஷன் கடைக்கு செல்லும் ரோட்டை குடிநீர் குழாய் பதிப்பதற்காக தோண்டி அதை சரிவர மூடாமல் விட்டு விட்டனர். இதனால் அந்த ரோடு குண்டும், குழியுமாக காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பெய்த பலத்த மழை காரணமாக அந்த ரேஷன் கடை ரோடு சேறும், சகதியுமாக மாறியது. மேலும் ரேஷன் கடைக்கு உணவுப்பொருட்கள் ஏற்றி வந்த லாரி அங்குள்ள சகதியில் சிக்கியது. பின்னர் லாரி மீட்கப்பட்டது. 
உணவுப்பொருட்கள்  வினியோகம்
அதுமட்டுமின்றி அந்த ரேஷன் கடை கடந்த 2 மாதங்களாக அடைக்கப்பட்டதுடன், பொதுமக்களுக்கு உணவுப்பொருட்களும் வினியோகிக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர். இதுகுறித்த செய்தி ‘தினத்தந்தி’ நாளிதழில் நேற்று முன்தினம் பிரசுரமாகி இருந்தது. 
இதைத்தொடர்ந்து அதிகாரிகள் நேற்று காலை சித்தாரில் உள்ள சொக்கநாச்சி அம்மன் நகருக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்குள்ள சித்தார் மெயின்ரோட்டில் உடனடியாக ஒரு கட்டிடத்தை தற்காலிகமாக வாடகைக்கு பிடித்தனர். உடனே ரேஷன் கடைக்கு தேவையான அனைத்து உணவுப்பொருட்களும் கொண்டு வரப்பட்டன. 
இதையடுத்து அந்த பகுதி பொதுமக்களுக்கு ரேஷன் கடையில் இருந்து உணவுப்பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டன. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
கோரிக்கை
இதுபற்றி செய்தி வெளியிட்ட ‘தினத்தந்தி’ நாளிதழுக்கும், உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர். மேலும் சேறும், சகதியுமாக உள்ள ரோட்டை உடனடியாக சீரமைத்து அரசுக்கு சொந்தமான கடையிலேயே மீண்டும் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.  
1 More update

Next Story