தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் ஜவுளி விற்பனை களைகட்டியது
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் ஜவுளி விற்பனை களைகட்டியது.
ஈரோடு
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஈரோட்டில் ஜவுளி விற்பனை களைகட்டியது.
ஜவுளி விற்பனை
ஜவுளி வியாபாரத்துக்கு பிரசித்தி பெற்ற ஈரோட்டில் பல்வேறு வகையான புதிய ஆடைகள் மொத்த விற்பனை செய்யப்படுகிறது. ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா, ஈஸ்வரன் கோவில் வீதி, மணிக்கூண்டு உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான கடைகள் உள்ளன. இதேபோல் ஈரோடு அருகே கங்காபுரம் பகுதியில் உள்ள டெக்ஸ்வேலி வளாகத்திலும் ஜவுளி மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
தீபாவளி பண்டிகை வருகிற 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளதால் பொதுமக்கள் பலர் புத்தாடைகளை வாங்க ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் ஜவுளி கடைகள் அதிகமாக உள்ள பகுதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. ஈரோட்டில் நேற்று கூடிய சந்தையில் ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டு இருந்தன. குறிப்பாக சாலையோரமாக வியாபாரிகள் துணிகளை குவித்து வைத்து இருந்தனர். இந்த துணிகளை பொதுமக்கள் பலர் ஆர்வமாக வந்து வாங்கி சென்றார்கள்.
களைகட்டியது
இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறியதாவது:-
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஜவுளி விற்பனை மந்தமாக காணப்பட்டது. வெளிமாநில வியாபாரிகள் வராததால் விற்பனை மிகவும் குறைவாக இருந்தது. கொரோனா 3-வது அலை பரவும் அபாயம் உள்ளதால் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது வியாபாரம் குறைவாக இருக்குமோ என்ற அச்சம் வியாபாரிகள் மத்தியில் நிலவி வந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் குறைவாக காணப்படுவதால் பல்வேறு கட்ட தளர்வுகளை அரசு அறிவித்து இருக்கிறது.
இந்தநிலையில் தீபாவளி சீசன் தொடங்கி இருப்பதால், ஜவுளி வியாபாரம் களைகட்டி உள்ளது. இன்னும் 2 வாரங்களே இருப்பதால் மொத்த விற்பனையும் அமோகமாக நடந்தது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஜவுளி வாங்க வந்து உள்ளனர். ரெடிமேடு ரகங்களான சட்டை, பேண்ட், சுடிதார், லெகின்ஸ் போன்ற ஆடைகள் அதிக அளவில் விற்பனையாகி வருகின்றன.
இவ்வாறு வியாபாரிகள் கூறினர். கொரோனா ஊரடங்கு காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டு காணப்பட்ட வியாபாரிகள், தற்போது ஜவுளி விற்பனை களைகட்டி இருப்பது அவர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.
Related Tags :
Next Story