சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு


சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு
x
தினத்தந்தி 20 Oct 2021 7:52 PM IST (Updated: 20 Oct 2021 7:52 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் அன்னாபிஷேக வழிபாடு நடந்தது.
கோபி
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு அன்னாபிஷேக வழிபாடு நடந்தது. இதில் பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முகக்கவசம் அணிந்தும் சாமி தரிசனம் செய்தனர்.
கோபி பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவிலில் உள்ள மரகதீஸ்வரருக்கு நேற்று மதியம் 12 மணி அளவில் பால், தயிர், பஞ்சாமிர்தம் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டன. அதைத்தொடர்ந்து சாதம் மற்றும் 75 கிலோ காய்கறிகள் இனிப்புகளை கொண்டு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து அலங்காரம் கலைக்கப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் பாரியூர் அமரபணீஸ்வரர் கோவில், கோபி விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில், மாதேஸ்வரன் கோவில், காசிபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், மொடச்சூர் ஈஸ்வரன் கோவில் மற்றும் கோபி பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவில்களில் அன்னாபிஷேகம் நடந்தது.
கொடுமுடி
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவிலில் மூலவர் மகுடேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது. அன்னாபிஷேக அலங்காரத்தை பிரபு குருக்கள் செய்திருந்தார்.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி அண்ணாமலையார் கோவிலில் அன்னாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மாலை 6 மணி அளவில் அன்னம் மற்றும் காய்கறி கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
சிவகிரி
சிவகிரி அருகே தலையநல்லூரில் உள்ள நாகேஸ்வரர் கோவிலில் நேற்று மாலை 6 மணிக்கு மூலவருக்கு பலவிதமான நறுமணப்பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து லிங்கம் முழுவதும் 10 கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம் சாத்தப்பட்டு, காய், கனிகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
அந்தியூர்
அந்தியூர் பஸ் நிலையம் அருகே மிகவும் பழமையானதும் பிரசித்தி பெற்றதுமான செல்லீஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு சிவலிங்கத்துக்கு பச்சரிசி அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் கனிகளிலும், காய்களிலும் அலங்காரம் செய்யப்பட்டன.
இதேபோல் அந்தியூர் அருகே அத்தாணி குப்பாண்டபாளையத்தில் உள்ள மாதேஸ்வரன் கோவிலில் சிவலிங்கத்துக்கு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பச்சரிசி மூலம் சமைக்கப்பட்ட அன்னத்தால் சிவலிங்கத்துக்கு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. பின்னர் காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் நாகேஸ்வர சாமி கோவிலில் சாமிக்கு அன்னாபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. 
மேலும் கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவிலில் சாமிக்கும், கொந்தளம் நாகேஸ்வர சாமி கோவிலில் உள்ள லிங்கத்துக்கும், வெங்கம்பூர் சோளீஸ்வரர் கோவிலிலும் அன்னாபிஷேகம் நடந்தது.

Next Story