தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்


தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Oct 2021 7:58 PM IST (Updated: 20 Oct 2021 7:58 PM IST)
t-max-icont-min-icon

ஈரோடு மாநகர் பகுதியில், தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஈரோடு மாநகர் பகுதியில், தீபாவளி பண்டிகையையொட்டி கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தீபாவளி பண்டிகை
தீபாவளி பண்டிகை வருகிற நவம்பர் மாதம் 4-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி ஈரோடு மாநகர் பகுதியில் உள்ள கடைவீதிகளில் விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கிவிட்டது. குறிப்பாக பன்னீர்செல்வம் பூங்கா, மணிக்கூண்டு, ஆர்.கே.வி. ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, மேட்டூர் ரோடு போன்ற பகுதிகளில் ஜவுளி கடைகள், நகை கடைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி வழிப்பறி, திருட்டு சம்பவங்களில் திருடர்கள் ஈடுபட அதிக அளவில் வாய்ப்புள்ளதால் இதை தடுக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஈரோடு மாவட்ட போலீஸ் துறை சார்பில், ஈரோடு மாநகர் பகுதியில் முக்கிய வீதிகளில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து அங்கு 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு மக்கள் நடமாட்டத்தை கண்காணித்து வருவார்கள்.
கண்காணிப்பு கோபுரம்
அதன்படி இந்த ஆண்டு தீபாவளிக்கு இன்னும் 2 வாரங்களே உள்ள நிலையில், மாநகர் பகுதியில் தற்போது கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
மாநகரில் குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் பஸ் நிலையம், மேட்டூர் ரோடு, காளை மாட்டு் சிலை சந்திப்பு, மணிக்கூண்டு, கிருஷ்ணா தியேட்டர் சந்திப்பு, ஆகிய 5 இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) முதல் போலீசார் கண்காணிப்பு கோபுரம் மூலம் மக்கள் நடமாட்டத்தை கண்காணிப்பார்கள்.

Next Story