இயல்பு நிலைக்கு திரும்பிய பஸ் நிலையம்


இயல்பு நிலைக்கு திரும்பிய பஸ் நிலையம்
x
தினத்தந்தி 20 Oct 2021 8:05 PM IST (Updated: 20 Oct 2021 8:05 PM IST)
t-max-icont-min-icon

பள்ளி-கல்லூரிகள் திறக்கப்பட்டதால் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அலைமோதியது

கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் பல்வேறு தொழில்கள் முடங்கின. பள்ளி, கல்லூரிகள் நீண்ட நாட்களாக மூடப்பட்டு இருந்தது. தமிழக அரசு பல்வேறு கட்ட தளர்வுகளை அறிவித்த பிறகும் பயணிகள் கூட்டம் குறைவாக காணப்பட்டதால் மினி பஸ்களும், தனியார் பஸ்களும் குறைந்த எண்ணிக்கையில் இயக்கப்பட்டன.
இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் குறைந்ததை தொடர்ந்து பள்ளி, கல்லூரிகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்து உள்ளது. அனைத்து தொழில் நிறுவனங்களும் 100 சதவீத பணியாளர்களுடன் செயல்பட்டு வருகிறது. எனவே கொரோனா பாதிப்பு இடைவெளிக்கு பிறகு பொதுமக்களின் வாழ்க்கை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது. நேற்று காலை ஈரோடு பஸ் நிலையத்தில் வழக்கமான பயணிகள் கூட்டம் அலைமோதியது. பஸ்களில் இடம்பிடிக்க பொதுமக்கள் பலர் முண்டியடித்து சென்றார்கள். மேலும், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே அதிக பயணிகள் செல்லும் பகுதிக்கு கூடுதல் பஸ்களை இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேசமயம் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பயணிகள் முறையாக பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

Next Story