மாவட்ட செய்திகள்

ஈரோட்டில்அம்பேத்கர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம் 32 அமைப்பினர் கோரிக்கை மனு + "||" + petticon

ஈரோட்டில்அம்பேத்கர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம் 32 அமைப்பினர் கோரிக்கை மனு

ஈரோட்டில்அம்பேத்கர் சிலை வைக்க அனுமதிக்க வேண்டும்கலெக்டரிடம் 32 அமைப்பினர் கோரிக்கை மனு
ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் 32 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
ஈரோட்டில் அம்பேத்கர் சிலை வைக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் 32 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கோரிக்கை மனு கொடுத்தனர்.
அம்பேத்கர் சிலை
ஈரோட்டில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்புகள் சார்பில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதில் பல்வேறு அமைப்புகள் சார்பில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்புக்குழு உருவாக்கப்பட்டது. இந்த குழு சார்பில் ஈரோட்டில் அம்பேத்கர் சிலை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்படும் என்று கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதன்பிறகு உயர் அதிகாரிகள் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதையடுத்து போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தநிலையில் புரட்சியாளர் அம்பேத்கர் சிலை அமைப்புக்குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சண்முகம் தலைமையில் அருந்ததியர் இளைஞர் பேரவை தலைவர் வடிவேல் ராமன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சிறுத்தை வள்ளுவன், மாநில துைணச்ெசயலாளா் சாதிக், தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனை செல்வன் மற்றும் அமைப்பினர் பலர் கோரிக்கை மனு கொடுப்பதற்காக ஈரோடு கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று திரண்டு வந்தனர்.
கோரிக்கை மனு
அவர்கள் அம்பேத்கர் புகைப்படங்களை கைகளில் ஏந்தியபடி மனு கொடுக்க வந்தனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். பிறகு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் அவர்கள் கோரிக்கை மனுவை கொடுத்தார்கள். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-
சமத்துவத்தை வலியுறுத்திய பெரியார் பிறந்த ஈரோட்டில் அம்பேத்கர் சிலையும் அமைக்கப்பட வேண்டும். ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. அங்கு அம்பேத்கர் சிலையும் வைக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறிஇருந்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
32 அமைப்புகள்
இதேபோல் அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மனு கொடுக்கும்போது, ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பழனிசாமி, ஆதி தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் தளபதி குமார், இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் மோகன் ராஜ், ஜனநாயக மக்கள் கழக தலைவர் ஆறுமுக கண்ணன், நீரோடை அமைப்பின் தலைவர் கணகுறிஞ்சி, திராவிடர் விடுதலை கழக மாநில பொருளாளர் ரத்தினசாமி, தலித் விடுதலை இயக்க மாவட்ட தலைவர் பொன்சுந்தரம், மாவீரன் பொல்லான் பேரவை பொதுச்செயலாளர் சண்முகம், ஜகஜீவன்ராம் மக்கள் இயக்க மாநில பொதுச்செயலாளர் எம்.கே.ஆறுமுகம், பகுஜன் சமாஜ் கட்சி மாவட்ட தலைவர் ஈஸ்வரன், திராவிடர் பேரவை தலைவர் மாசிலாமணி, அருந்ததியர் முன்னேற்ற பேரவை தலைவர் சாமிநாதன் உள்பட மொத்தம் 32 அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசு மினி கிளினிக் டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் கலெக்டரிடம் கோரிக்கை மனு
அரசு மினி கிளினிக் டாக்டர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்று கலெக்டர் கிருஷ்ணனுண்ணியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
2. பெரியசடையம்பாளையத்தில் தரமற்ற கட்டுமானத்தால் குடிநீர் தொட்டியில் வெடிப்பு- மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு
பெரியசடையம்பாளையத்தில் தரமற்ற கட்டுமானத்தால் குடிநீர் தொட்டியில் வெடிப்பு ஏற்பட்டு உள்ளதாக மாவட்ட வருவாய் அதிகாரியிடம் கம்யூனிஸ்டு கட்சியினர் மனு கொடுத்தனர்.
3. பட்டாசு உற்பத்தியாளர்கள் எம்.பி.யிடம் மனு
பட்டாசு உற்பத்தியாளர்கள் மாணிக்கம் தாகூர் எம்.பி.யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
4. நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி பா.ம.க.வினர் மனு
நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி பா.ம.க.வினர் மனுகொடுத்தனர்.