ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் தடுப்பூசி முகாம்
ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
ஈரோடு மாவட்டத்தில் மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 2 நாட்கள் நடக்கிறது.
கொரோனா தடுப்பூசி
ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் 6-வது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் நாளையும் (வெள்ளிக்கிழமை), நாளை மறுநாளும் (சனிக்கிழமை) 2 நாட்கள் நடக்கிறது. இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாத 18 வயது நிரம்பிய அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
ஏற்கனவே முதல் தவணை தடுப்பூசி செலுத்திய நபர்கள் கோவிஷீல்டு தடுப்பூசியாக இருந்தால் 84 நாட்கள் நிறைவடைந்த பிறகும், கோவேக்சின் தடுப்பூசியாக இருந்தால் 28 நாட்கள் நிறைவடைந்த பிறகும் 2-வது தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
உணவு கட்டுப்பாடு
கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள உணவு கட்டுப்பாடு ஏதுமில்லை. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. 18 வயது நிரம்பிய பொதுமக்கள் தவறாமல் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி கூறி உள்ளார்
Related Tags :
Next Story