கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தொழிலாளர் நல அலுவலகம் முன்பு சிதம்பரனார் மாவட்ட கட்டுமான தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாரியப்பன், பொருளாளர் காசி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், கட்டுமான தொழிலாளர்களுக்கு மாத ஓய்வூதியம் ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதல்படி நலவாரிய கூட்ட முடிவுக்கு ஏற்ப அனைத்து பணபலன்களும் உயர்த்தி வழங்க வேண்டும், இயற்கை மரணம் நிவாரண நிதி ரூ.2 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும், கட்டுமான பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதியம் வழங்க வேண்டும், கட்டுமான தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் பெருமாள், ஸ்டான்லி, இசக்கியம்மாள், செல்வகுமார், அந்தோணி செல்வம், தெய்வேந்திரன், முருகன், முத்துகிருஷ்ணன், முத்துச்சாமி மற்றும் சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் அப்பாத்துரை, சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story