தினத்தந்தி புகார் பெட்டி
தினத்தந்தி புகார் பெட்டி
குரங்குகள் தொல்லை
கோத்தகிரி தாசில்தார் அலுவலக வளாகத்திற்குள் ஏராளமான குரங்குகள் முகாமிட்டுள்ளன. இவை அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களை துரத்தி கடிக்க வருவதால் அவர்கள் அச்சத்துடன் வந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே இந்த குரங்குகளை கூண்டு வைத்து பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜெய்சங்கர், கோத்தகிரி.
பயணிகள் அவதி
கிணத்துக்கடவு பஸ் நிறுத்தத்துக்கு தினமும் ஏராளமான பயணிகள் வந்து செல்கிறார்கள். ஆனால் இங்கு பயணிகள் நிழற்குடை இல்லை. இதனால் பயணிகள் வெயிலில் ஒதுங்கு வதற்காக அருகே உள்ள கடைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. மேலும் முதியவர்கள் கால்கடுக்க நிற்பதால் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அங்கு உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.
நவநீதகிருஷ்ணன், சிங்கையன்புதூர்.
திறக்கப்படாத வேளாண் அலுவலகம்
கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இருக்கும் வளாகத்தில் வேளாண் விரிவாக்க மையம் கடந்த சில மாதங் களுக்கு முன்பு கட்டப்பட்டது. இந்த பணிகள் முடிந்த பின்னரும் இந்த அலுவலகம் இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் விவசாயிகள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த அலுவலகத்தை திறக்க வேண்டும்.
செல்வராஜ், கிணத்துக்கடவு.
ஆபத்தான மின் பெட்டி
கோவை பீளமேடு சிக்னல் அருகே மின் பெட்டி ஒன்று உள்ளது. இது திறந்த நிலையில் ஆபத்தான முறையில் இருக்கிறது. இதன் காரணமாக இந்த வழியாக செல்பவர்கள் அதில் கை வைத்தால் மின்சாரம் தாக்கக்கூடிய நிலை நீடித்து வருகிறது. எனவே ஆபத்து விளைவிக்கக்கூடிய வகையில் இருக்கும் அந்த மின்பெட்டியை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமராசு, பீளமேடு.
நடைபாதை ஆக்கிரமிப்பு
பொள்ளாச்சி பழைய பஸ் நிலைய பகுதிகளில் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு வசதியாக நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது. நடைபாதையில் கடைகள் அமைத்து ஆக்கிரமித்து உள்ளதால் பயணிகள் கடும் அவதி படுகின்றனர். எனவே நடை பாதை ஆக்கிரமிப்பு அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
முருகன், பொள்ளாச்சி.
விபத்து ஏற்படும் அபாயம்
பொள்ளாச்சி கோவை ரோடு மகாலிங்கபுரம் ஆர்ச் பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் சிறிய பாலம் சேதம் அடைந்து உள்ளது. இந்த பாலத்தை சீரமைக்காமல் தடுப்புகள் வைத்து உள்ளனர். இதனால் அடிக்கடி அந்த பகுதியில் விபத்துகள் ஏற்படுகின்றன. எனவே பாலத்தை சீரமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கார்த்தி, மகாலிங்கபுரம்.
ஆபத்தான பாதாள சாக்கடை
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் உள்ள பாதாள சாக்கடை காங்கிரீட் கொண்டு மூடப்படாமல் ஆபத்தை விளைவிக்கும் வகையில் திறந்தே கிடக்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படும் முன்பு திறந்து கிடக்கும் பாதாள சாக்கடையை மூட வேண்டும்.
ராஜா, காமராஜர் ரோடு.
நிழற்குடை வேண்டும்
கோவை வரதராஜபுரம் பஸ்நிறுத்தத்தில் நிழற்குடை அமைக்கப் பட்டு இருந்தது. பின்னர் அது திடீரென்று அகற்றப்பட்டது. இதனால் இங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகள் வெயிலில் காய்ந்தபடியும், மழைக்காலத்தில் மழையில் நனைந்தபடியும் கால்கடுக்க காத்து நிற்கிறார்கள். இதனால் அவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே இங்கு உடனடியாக நிழற்குடை அமைக்க வேண்டும்.
வரதகுமார், கோவை.
விபத்தை ஏற்படுத்தும் குழி
வெள்ளலூரில் இருந்து சிங்காநல்லூர் செல்லும் வழியில் மேம் பாலம் இருக்கிறது. இந்த மேம்பாலம் இறங்கும் இடத்தில் பள்ளி அருகே சாலையோரத்தில் ஆழமான குழி உள்ளது. இந்த குழி யால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் அதற்குள் தவறி விழ வாய்ப்பு உள்ளது. எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அந்த குழியை அதிகாரிகள் மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ரிச்சர்டு, வெள்ளலூர்.
பாலத்தில் வளரும் மரக்கன்றுகள்
கோவை சிங்காநல்லூரில் இருந்து வெள்ளலூர் செல்லும் சாலை யில் மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தின் சுவற்றில் அரச மரக்கன்றுகள் வளர்ந்து உள்ளன. இதை கவனிக்காமல் விட்டால், அவை வளர்ந்து பெரிதாகும்போது வேர்கள் பாலத்தின் மீது படர்ந்து விடும் என்பதால் பாலத்தில் வெடிப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அதற்குள் அந்த மரக்கன்றுகளை அகற்றி சாலையோரத்தில் நட வேண்டும்.
ராபர்ட், சிங்காநல்லூர்.
Related Tags :
Next Story