கார்கள் மோதல்; ெபண் பலி


கார்கள் மோதல்; ெபண் பலி
x
தினத்தந்தி 21 Oct 2021 12:05 AM IST (Updated: 21 Oct 2021 12:05 AM IST)
t-max-icont-min-icon

கார்கள் மோதல்; ெபண் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 62), அவரது மனைவி சொக்கம்மாள்(56) மற்றும் உறவினர்கள் என 4 பேர் விருதுநகரில் இருந்து ஸ்ரீவில்லிபுத்தூருக்கு கார் மூலம் நேற்று வந்தனர். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு மீண்டும் விருதுநகர் செல்ல ஸ்ரீவில்லிபுத்தூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மற்றொரு கார் கிருஷ்ணன்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்தது. அந்த காரில் முத்துசக்தி விநாயகம்(45), மஞ்சு(40), சக்திகார்த்திகேயன்(12) உள்பட 5 ேபர் இருந்தனர். இந்த 2 காரும் நத்தம்பட்டி அருகே வரும்போது மோதியதில் 2 காரிலும் இருந்த 9 பேரும் படுகாயம் அடைந்தனர். இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சொக்கம்மாள் பரிதாபமாக இறந்தார். காயமடைந்த மற்றவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த விபத்தினால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து நத்தம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story