டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது


டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது
x
தினத்தந்தி 21 Oct 2021 1:47 AM IST (Updated: 21 Oct 2021 1:47 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோலை தொடர்ந்து டீசல் விலையும் ரூ.100-ஐ தாண்டியது.

பெரம்பலூர்:

ரூ.100-ஐ தாண்டியது
பெட்ரோல், டீசல் விலை கடந்த ஆக்ஸ்டு மாதம் வரை வரலாறு காணாத உச்சத்தில் இருந்தது. பின்னர் தமிழக அரசு அறிவிப்பால் 3 ரூபாய் குறைக்கப்பட்டதன் காரணமாக, ரூ.102-க்கு விற்பனையான ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100-க்கு கீழ் வந்தது. டீசல் விலையும் சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3-ந்தேதி மீண்டும் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100-ஐ தாண்டியது. ஆனால் டீசல் விலை லிட்டருக்கு ரூ.100-க்கு குறைவாக காணப்பட்ட நிலையில், தொடர்ந்து விலை ஏறியதன் காரணமாக நேற்று ஒரு லிட்டர் டீசல் ரூ.100-ஐ தாண்டி விற்பனை ஆனது. முன்னதாக கடந்த 12-ந்தேதி டீசல் விலை லிட்டருக்கு 99 ரூபாய் 50 காசு இருந்த நிலையில், 13-ந்தேதி ரூ.98 ரூபாய் 50 காசுக்கும், 14-ந்தேதி ரூ.98 ரூபாய் 84 காசுக்கும், 15-ந்தேதி ரூ.99 ரூபாய் 17 காசுக்கும், 16-ந்தேதி ரூ.99 ரூபாய் 50 காசுக்கும், 17-ந்தேதி 99 ரூபாய் 83 காசுக்கும், 18 மற்றும் 19-ந்தேதிகளில் விலை உயராமல் அதே விலையிலும் விற்பனையானது.
வாகன ஓட்டிகள் கலக்கம்
இந்நிலையில் நேற்று டீசல் லிட்டருக்கு 34 காசு உயர்ந்து ரூ.100-ஐ தாண்டி 100 ரூபாய் 17 காசுக்கு விற்பனையானதால் வாகன ஓட்டிகள், விவசாயிகள் கலக்கம் அடைந்தனர். பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று பெட்ரோல் ஒரு லிட்டர் 104 ரூபாய் 19 காசுக்கு விற்பனையானது. ஸ்பீடு பெட்ரோல் ஒரு லிட்டர் 106 ரூபாய் 69 காசுக்கு விற்பனையானது என்பது குறிப்பிடத்தக்கது.
அரியலூர் மாவட்டத்தில்...
இதேபோல் அரியலூர் மாவட்டத்திலும் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.100-ஐ தாண்டியது. இதில் அரியலூர் நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100-ஐ தாண்டியது. தற்போது ஒரு லிட்டர் பெட்ரோல் 104 ரூபாய் 26 பைசாவுக்கு விற்பனையாகிறது. நேற்று ஒரு லிட்டர் டீசல் விலையும் 100 ரூபாயை தாண்டியது. இந்த விலை ஏற்றத்தால் ஆட்டோ, கார், லாரி போன்ற வாகனங்களின் வாடகை கட்டணங்கள் உயரும் சூழ்நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த வாகனங்களில் மளிகை, காய்கறி, ஜவுளி, இரும்பு, சிமெண்டு ஆகியவற்றை ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு எடுத்துச் செல்வதற்கான வாடகை கட்டணம் அதிகமாகி விலைவாசி மேலும் உயரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

Related Tags :
Next Story