ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற பெண் தற்கொலை


ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற பெண் தற்கொலை
x
தினத்தந்தி 21 Oct 2021 6:13 AM GMT (Updated: 21 Oct 2021 6:13 AM GMT)

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஊராட்சி வார்டு உறுப்பினராக வெற்றி பெற்ற பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிவபுரம் ஊராட்சியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி தமிழ்ச்செல்வி (வயது 37). இவர் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் சிவபுரம் ஊராட்சி 5-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 17-ந்தேதி குடும்பத்தகராறு காரணமாக தமிழ்ச்செல்வி பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து உயிருக்கு போராடினார். தமிழ்ச்செல்வியை மீட்டு அவரது உறவினர்கள் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று முன்தினம் இரவு அவர் இறந்து போனார். இதுகுறித்து சுங்குவார்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். நாளை (வெள்ளிக்கிழமை) துணைத்தலைவர்கள் தேர்ந்து எடுக்கபட உள்ளனர். தமிழ்ச்செல்விக்கு துணைத்தலைவர் பதவி வழங்க இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் தமிழ்ச்செல்வி வார்டு உறுப்பினராக பதவியேற்காமலேயே இறந்து போனார். தமிழ்ச்செல்வி தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மன உளைச்சலில் இருந்தாக கூறப்படுகிறது. போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பிறகே தமிழ்ச்செல்வி தற்கொலைக்கான காரணம் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

Next Story