சேரிபாளையம் அரசு பள்ளியில் உலக அயோடின் தினம் கடைப்பிடிப்பு
சேரிபாளையம் அரசு பள்ளியில் உலக அயோடின் தினம் கடைப்பிடிப்பு
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் உலக அயோடின் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் கவிதா தலைமை தாங்கினார்.
சேரிபாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி முன்னிலை வகித்தார். ஆசிரியர் வடிவேல் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் அரசு மருத்துவர் திலீப்குமார் கலந்து கொண்டு பேசுகையில், அயோடின் கலந்த உப்பை சாப்பிடுவது நல்லது.
அயோடினை தவிர்க்கும் போது பெரியவர்களுக்கு நுண்ணறிவு திறன் 10 முதல் 15 புள்ளிகள் குறைவு ஏற்ப்படும். பெண்களுக்கு அயோடின் சத்துக் குறைபாடு ஏற்படும்போது மலட்டுத்தன்மை ஏற்படும். இதனை தடுக்க கண்டிப்பாக அயோடின் கலந்த உப்பை சாப்பிட்டால் மேற்கண்ட பாதிப்பை கட்டுப்படுத்தலாம்.
பெரியவர்கள் ஒரு நாளைக்கு 150 மைக்ரோகிராம் உப்பையும், கர்ப்பிணிகள் ஒரு நாளைக்கு 800 மைக்ரோ கிராம் அயோடின் உப்பையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம் என்றார். முன்னதாக அயோடின் குறைபாடுகளால் ஏற்படும் விளைவுகள் குறித்து கண்காட்சி நடைபெற்றது.
மேலும் மாணவ-மாணவிகளுக்கு வினாடி-வினா போட்டிகளும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராஜவேல், வட்டார விரிவாக்க கல்வியாளர் ஜோதிமணி மற்றும் சுகாதாரத் துறையினர், அரசு பள்ளி ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story