ஒக்கிலிபாளையம் மாகாளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
ஒக்கிலிபாளையம் மாகாளியம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
பொள்ளாச்சி
பாளையத்தில் மாகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பூசாரி பஞ்சலிங்கம் என்பவர் பூஜைகள் செய்வதற்கு கோவிலுக்கு சென்றார்.
அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்த போது உண்டிலை உடைத்து, அதில் இருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடியது தெரியவந்தது.
இதுகுறித்து வடக்கிபாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலின் பேரில் துணை சூப்பிரண்டு (பயிற்சி) செல்வகுமார், சப்-இன்ஸ்பெக்டர் ராமசந்திரன் மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிந்து இருந்த ரேகைகளை பதிவு செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அந்த பகுதிகளில் உள்ள கேமராக்களையும் ஆய்வு செய்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
Related Tags :
Next Story