தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 21 Oct 2021 10:55 PM IST (Updated: 21 Oct 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி



செடிகள் அகற்றப்படுமா?

கோத்தகிரி அருகே சுற்றுலாத்தலமான கேத்தரின் நீர்வீழ்ச்சி காட்சி முனை கோபுரம் உள்ளது. இந்த பகுதி முழுவதும் புதர்ச்செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளன. இங்கு கரடிகள் நடமாட்டம் அதிகம் உள்ளதால், இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அச்சத்துடன் சென்று வர வேண்டிய நிலை நீடித்து வருகிறது. எனவே காட்சிக் கோபுரம் பகுதியில் வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.
கோவிந்தராஜ், கோத்தகிரி.

சேறும், சகதியுமான சாலை

  ஊட்டி பிச்சைக்கனி லேன் தெரு பகுதியில் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவே மணல் கொட்டப்பட்டு உள்ளதால், தொடர் மழை காரணமாக சேறும் சகதியுமாக மாறி இருக்கிறது. இதனால் வாகனங் கள் செல்ல முடியாத நிலை இருக்கிறது. வாகனங்கள் சேற்றில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, சாலையை முறையாக பராமரிக்க வேண்டும்.
  மூர்த்தி, பெர்ன்ஹில்.

அபாயகரமான குழி

  ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இத்தலார் செல்லும் சாலையோரத்தில், சாலையின் அடியில் மழைநீர் கால்வாய் செல்கிறது. அதன் பக்கவாட்டில் அபாயகரமாக பெரிய குழி உள்ளது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும்போது குழிக்குள் வாகனங்கள் சிக்கும் நிலை காணப்படுகிறது. ஆகவே, விபத்து ஏற்படுவதை தடுக்க தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும்.
  சுனிதா, மஞ்சனக்கொரை.

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  நீலகிரி மாவட்டம் கூடலூரில் நகராட்சி தூய்மை பணியாளர்கள் வணிக நிறுவனங்களுக்கு நேரடியாக சென்று குப்பைகளை பெற்று வந்த நிலையில் தற்போது அப்பணி நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் குப்பைகள் பொது இடங்களில் கொட்டப்படுவதால் குவிந்து கிடக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ராஜ், கூடலூர்.

வீணாக கிடக்கும் குப்பை தொட்டிகள்

  கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட தெருக்களில் குப்பைகளை சேகரிக்க குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. இதில் பல தொட்டிகள் கே.கே.புதூர். காமராஜர் வீதியில் ஒரே இடத்தில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. இதனால் கடும் துர்நாற்றம் வீசுவதால் அந்தப் பகுதியில் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவ அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உரிய இடத்தில் அந்த குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும்.
  முகமது அலி, சிவனந்தா காலனி.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

  கோவையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கணபதி எப்.சி.ஐ. குடோன் மெயின் ரோட்டில் தண்ணீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. ஏற்கனவே இந்த சாலை குண்டும் குழியுமாக இருப்பதால், தற்போது சேறும் சேர்ந்து உள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் விபத்தில் சிக்கி காயத்துடன் உயிர் தப்பிச்செல்லும் நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  கண்ணன், கணபதி.

சாலைக்கு வந்த குப்பைகள்

  கோவை-சிறுவாணி ரோட்டில் உள்ள காருண்யா நகர் அருகே சாலையோரத்தில் 4 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டு உள்ளன. அதில் சேர்ந்துள்ள குப்பைகளை அகற்றாததால் தெருநாய்கள் அங்கு சூழ்ந்து குப்பைகளை சாலையில் இழுத்து போட்டு உள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே விபத்துகள் ஏற்படுவதற்கு முன்பு அங்கு குவிந்துள்ள குப்பைகளை அகற்ற வேண்டும்.
  ரன்வீர் நிவின். காருண்யாநகர்.

ஒளிராத தெருவிளக்கு

  கோவை கணபதி 41-வது வார்டு அலமேலுமங்காபுரத்தில் விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் அருகே உள்ள தெருவிளக்கு ஒளிருவது இல்லை. இதனால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் இந்த வழியாக செல்பவர்கள் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தெருவிளக்கை ஒளிர செய்ய வேண்டும்.
  சிவகாமி நடராஜன், அலமேலுமங்காபுரம்.

வேகத்தடை வேண்டும்

  கோவை துடியலூரில் இருந்து வெள்ளக்கிணர் செல்லும் வழியில் எஸ் வடிவிலான வளைவு உள்ளது. இந்த வழியாக வாகனங்கள் வேகமாக வருவதால் இந்த வளைவில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே உயிரிழப்புகள் ஏற்படுவதற்கு முன்பு இந்த வளைவு முன்பு வேகத்தடை அமைக்க வேண்டும்.
  யோகி சதீஷ், துடியலூர்.

இருக்க முடியாத இருக்கை

  கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். இந்த ஆஸ்பத்திரி அருகே உள்ள பஸ்நிறுத்தத்தில் போடப்பட்டு உள்ள இருக்கை, உடைந்த நிலையில் இருப்பதால் யாரும் அமர முடியாத நிலை காணப்படுகிறது. மேலும் இருக்கையில் இடைவெளி அதிகமாக இருப்பதால் குழந்தைகள் இருந்தால் உள்ள சென்றுவிடும் நிலையும் நீடித்து வருகிறது. எனவே அதை அதிகாரிகள் சரிசெய்ய வேண்டும்.
  சந்தியா, காட்டூர்.

செயல்படாத சிக்னல்

  கோவை அரசு ஆஸ்பத்திரி அருகே அரசு கல்லூரி சேரும் இடத்தில் சிக்னல் உள்ளது. இந்த சிக்னல் செயல்படுவது இல்லை. இதனால் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் தாறுமாறாக செல்வதால் விபத்துகள் ஏற்படும் அபாயம் நிலவி வருகிறது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சிக்னலை இயங்க வைக்க வேண்டும்.
  ஏ.ஆர்.முத்துராஜ், கோவை.

இருள் சூழ்ந்த வீதி

  கோவை சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ். காலனி சங்கர் நகரின் பின்னால் உள்ள வீதியில் கடந்த 20 நாட்களுக்கும் மேல் தெருவிளக்கு கள் ஒளிருவது இல்லை. இதனால் இந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் சிரமம் அடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து பழுதான தெருவிளக்குகளை சரிசெய்து ஒளிர செய்ய வேண்டும்.
  சங்கர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி.


Next Story