கோவில்களில் தங்கம் உருக்கும் திட்டத்தில் பாரம்பரிய நகைகள் குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்- ஈரோட்டில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி


கோவில்களில் தங்கம் உருக்கும் திட்டத்தில் பாரம்பரிய நகைகள் குறித்தும் அரசு தெளிவுபடுத்த வேண்டும்- ஈரோட்டில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி
x
தினத்தந்தி 22 Oct 2021 3:28 AM IST (Updated: 22 Oct 2021 3:28 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் தங்கம் உருக்கும் திட்டத்தில் பாரம்பரிய நகைகள் குறித்தும் அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் பேட்டி அளித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.

ஈரோடு
கோவில்களில் தங்கம் உருக்கும் திட்டத்தில் பாரம்பரிய நகைகள் குறித்தும் அரசு தெளிவு படுத்த வேண்டும் என்று ஈரோட்டில் பேட்டி அளித்த பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை கூறினார்.
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம்
 கோவை மற்றும் சேலம் மண்டல பா.ஜனதா கட்சியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் கூட்டம் மற்றும் தமிழக அளவிலான மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று ஈரோட்டில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பா.ஜனதா கட்சி தேசிய பொதுச்செயலாளர் அருண் சிங் கலந்துகொண்டு நிர்வாகிகள் மத்தியில் பேசினார். 
பின்னர் மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
100 கோடி தடுப்பூசி
கொரோனாவுக்கு எதிரான போரில் பிரதமர் நரேந்திர மோடியின் நடவடிக்கையால் 100 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் எந்த வேறுபாடும் இன்றி லடாக் முதல் வடகிழக்கு மாநிலங்கள், தமிழகம் வரை முழுமையாக 100 கோடியே 40 லட்சம் பேருக்கு இன்று வரை கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 
தடுப்பூசி போட தொடங்கிய காலகட்டத்தில் ஊசி போட வேண்டாம் என்று எதிர்மறையான கருத்துகள் பரப்பப்பட்டன. ஆனால் நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது முழு நம்பிக்கை வைத்து ஊசியை போட்டுக் கொண்டனர். 
குற்றம் சாட்டப்பட்டவர்
தமிழகத்தில் தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது தி.மு.க. தலைவர் கருணாநிதி, தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோரால் குற்றம் சாட்டப்பட்டவர் செந்தில்பாலாஜி. தூத்துக்குடி எம்.பி கனிமொழியால் குற்றம்சாட்டப்பட்டவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. வருமானவரித்துறை, ஊழல் தடுப்பு பிரிவு உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் குற்றம் சாட்டப்பட்டு கோர்ட்டுகளில்  குற்ற வழக்கு தொடரப்பட்டவர் செந்தில் பாலாஜி. அவர் தற்போது தமிழகத்தின் மின்சாரத்துறை அமைச்சராக இருக்கிறார்.
தற்போது தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ஆட்சியில் முக்கியமான பொறுப்பை அவரிடம் கொடுத்து அவர் நல்லவர் என்று சான்றிதழ் கொடுப்பதை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 
தெளிவுபடுத்த வேண்டும்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேர்மையாக ஆட்சி செய்வதாக கூறுவதை வரவேற்கிறோம். பா.ஜனதா கட்சி ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக எப்போதும் இருக்கும்.
கோவில்களில் தங்கம் உருக்கும் திட்டம் குறித்து சில சந்தேகங்களை முன் வைத்திருந்தோம். அது தொடர்பான சரியான அரசு ஆணையை தமிழக அரசு வழங்கியிருக்கிறது. பாரம்பரிய நகைகள் என்ற பட்டியலில் காணிக்கையாக வந்த தாலிக்கொடியையும் பாரம்பரிய நகையாக நாங்கள் பார்க்கிறோம். எனவே அந்த நகைகளை உருக்கும் திட்டம் குறித்தும் தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும். 
 இவ்வாறு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கூறினார்.
1 More update

Next Story