கோவை தங்கம் மருமகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
கோவை தங்கம் மருமகன் ஆஸ்பத்திரியில் அனுமதி
கோவை
கோவை சாய்பாபா காலனி கணபதி லே-அவுட் பகுதியை சேர்ந்தவர் அருண் பிரகாஷ் (வயது 41). முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகனான இவர் தொழிலதிபராக உள்ளார்.
இந்த நிலையில் அருண் பிரகாஷ் தொழில் தொடங்குவதாக கூறி பீளமேடு சிட்ரா பகுதியை சேர்ந்த சிந்துஜா என்பவரிடம் ரூ.7 கோடியும், அவரது தந்தை செங்குட்டுவனிடம் ரூ.1½ கோடியும் வாங்கியதாக கூறப்படுகிறது. சில மாதங்கள் கழித்து இந்த பணத்தை அவர்கள் திருப்பி கேட்டபோது, அருண் பிரகாஷ் தர மறுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிந்துஜா மற்றும் அவரது தந்தை இதுகுறித்து தனித்தனியே மாநகர குற்ற பிரிவு போலீசில் புகார் அளித்தனர். இதில் செங்குட்டுவன் அளித்த புகாரின் பேரில் போலீசார் கடந்த 19-ந் தேதி அருண் பிரகாசை கைது செய்தனர்.
பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர் படுத்தி அவினாசி கிளை சிறையில் அடைக்க கொண்டு சென்றனர். இதனிடையே அருண் பிரகாஷ் தனக்கு உடல்நிலை பாதிப்பு உள்ளதாக உடனிருந்த போலீசாரிடம் தெரிவித்து உள்ளார்.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ஜெயில் கைதிகள் சிகிச்சை பெறும் வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story