தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x
தினத்தந்தி 22 Oct 2021 9:15 PM IST (Updated: 22 Oct 2021 9:15 PM IST)
t-max-icont-min-icon

தினத்தந்தி புகார் பெட்டி


பழுதடைந்த ரோடு

கோத்தகிரி அருகே உள்ள காத்துகுளி கிராமத்தில் இருந்து ஆடத் தொரைக்கு செல்லும் தார் ரோடு மழை காரணமாக பழுத டைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. அத்துடன் அதில் மழைநீர் தேங்கி கிடப்பதால் குழிகள் இருப்பது தெரிவது இல்லை. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பழுதான அந்த சாலையை சீரமைக்க வேண்டும்.

  கிருஷ்ணசாமி, கோத்தகிரி.

கட்டிட கழிவுகள் அகற்றப்படுமா? 

  கோவை பாப்பநாயக்கன்பாளையம் கந்தசாமி லே-அவுட்டில் சாலையோரத்தில் உள்ள சாக்கடை கால்வாய் அருகே கட்டிட கழிவுகளும், குப்பைகளும் குவிந்து உள்ளது. இதனால் சாக்கடை அடைத்து உள்ளதால் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதன் காரணமாக கடும் துர்நாற்றம் வீசுவதுடன், கொசுத்தொல்லையும் அதிகமாக இருக்கிறது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து கழிவுகளை அகற்ற வேண்டும்.
  ஆனந்த், கோவை.

விபத்தை ஏற்படுத்தும் சாலை

  கோவை திருச்சி சாலை நாடார் காலனி பகுதியில் மேம்பாலம் காரணமாக சாலை பழுதாகி குண்டும் குழியுமாக காட்சிய ளிக்கிறது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  கே.எப்.ஜேக்கப், கோவை.

தேங்கி கிடக்கும் குப்பைகள்

  பொள்ளாச்சி சின்னாம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட உடுமலை ரோட்டின் ஓரத்தின் குப்பைகள் தேங்கி கிடக்கின்றன. தற்போது மழை பெய்து வருவதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளது. குப்பைகளை முறையாக அகற்றாததால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே குப்பைகளை அகற்ற வேண்டும்.
  சிவா, சின்னாம்பாளையம்

வாகன ஓட்டிகள் அவதி

  பொள்ளாச்சி அருகே உள்ள மாக்கினாம்பட்டியில் இருந்து சோலபாளையம் வழியாக செல்லும் ரோட்டில் ரெயில்வே பாலம் உள்ளது. இந்த பாலத்தில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே பாலத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  ராஜன், மாக்கினாம்பட்டி

தினத்தந்தி செய்தி எதிரொலி:

நடைபாதை ஆக்கிரமிப்பு அகற்றம்

  குன்னூர் அருகே உள்ள அரவங்காடு பஸ் நிறுத்தம் பகுதியில் நடைபாதையில் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டி பகுதியில் செய்தி வெளியிடப்பட்டு இருந்தது. அதன்பயனாக அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்றி உள்ளனர். எனவே மக்களின் தேவை அறிந்து செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி.
  கோ.ராஜேஷ் கோபால், அரவங்காடு.

வீதியில் தேங்கும் கழிவுநீர்

  கோவை மாநகராட்சி 86-வது வார்டு பாரத் நகர் 2-வது வீதியில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. சில நேரத்தில் அவை வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அங்கு கடுமையாக துர்நாற்றம் வீசி வருகிறது. எனவே தொற்றுநோய் பரவுவதற்கு முன்பு சாக்கடை கழிவுநீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
  மகாஜூதீன், பாரத்நகர்.

கொடிகள் ஆக்கிரமிப்பு 

  பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பிரஸ் காலனியில் குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. இங்கு செடிகள் படர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அந்தப்பகுதியில் கொடிய விஷம் கொண்ட பாம்புகளின் நடமாட்டமும் அதிகரித்து உள்ளது. எனவே அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மேல்நிலை தொட்டியில் படர்ந்துள்ள கொடியை அகற்ற வேண்டும். 
  பி.நரிமுருகன், சூளேஸ்வரன்பட்டி.

பிச்சைக்காரர்கள் தொல்லை

  கோவை மாநகர பகுதியில் சாலையில் ஏராளமான சிக்னல்கள் உள்ளன. இந்த சிக்னல்களில் தற்போது பிச்சைக்காரர்களின் தொல்லை அதிகமாக உள்ளது. சிக்னல்களில் காத்திருப்பவர்கள் அவர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பர்சை எடுக்கும்போது அதை பறித்தும் செல்கிறார்கள். எனவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு பிச்சை எடுப்பவர்களை மீட்டு, காப்பகத்தில் சேர்க்க வேண்டும்.
  ஆனந்தன், காந்திபுரம்.

குண்டும் குழியுமான சாலை

  கோவை மாநகராட்சி 6-வது வார்டுக்கு உட்பட்ட காமராஜ் நகர், டி.வி.எஸ். நகர் பகுதியில் சாலை குண்டும் குழியுமாக காட்சி யளிக்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்களில் செல்பவர் கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி கீழே விழுந்து காயத்துடன் உயிர் தப்பிக்கும் நிலை நீடித்து வருகிறது. எனவே இந்த சாலையை சரிசெய்ய வேண்டும்.
  கனகராஜ், கோவை.

மின்விளக்கு வசதி வேண்டும்

  பொள்ளாச்சி உடுமலை சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சாலையில் மின் விளக்குகள் பொருத்தப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்து மின்விளக்கு வசதி செய்ய வேண்டும்.
  ராமன், பொள்ளாச்சி.
  --------------------

Next Story