மாவட்ட செய்திகள்

வால்பாறையில் துளிர்விட்டு வளர தொடங்கிய பசுந்தேயிலை + "||" + Green tea that started to bloom in Valparai

வால்பாறையில் துளிர்விட்டு வளர தொடங்கிய பசுந்தேயிலை

வால்பாறையில் துளிர்விட்டு வளர தொடங்கிய பசுந்தேயிலை
வால்பாறையில் துளிர்விட்டு வளர தொடங்கிய பசுந்தேயிலை
வால்பாறை

வால்பாறையில் கடந்த 1 மாதமாக விட்டு விட்டு பெய்து வந்த கனமழை கடந்த 3 நாட்களாக நின்று விட்டது. இந்த நிலையில் அவ்வப்போது லேசான சாரல் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பகலில் நல்ல வெப்பநிலையும் இரவில் கடுமையான பனிமூட்டம் சில சமயத்தில் லேசான மழையும் பெய்கிறது. 

இந்த காலசூழ்நிலை பசுந்தேயிலை உற்பத்திக்கு ஏற்றதாக இருப்பதால் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து எஸ்டேட்டு களிலும் பசுந்தேயிலை துளிர்விட்டு வளர தொடங்கி உள்ளது. இதன் காரணமாக கண்ணுக்கு எட்டும் தூரம் வரை பச்சை பசேலென காட்சியளிக்கிறது. 

பசுந்தேயிலை கொழுந்துவிட்டு வளர தொடங்கி உள்ளதால் தேயிலை உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டு உள்ளதாக தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

மேலும் தேயிலை தோட்டங்கள் பசுமையாக இருப்பதால் இங்கு வரும் சுற்றுலா பயணிகள் அதற்குள் சென்று புகைப்படம் எடுத்து மகிழ்ந்து வருகிறார்கள்.