காபி எஸ்டேட் கணக்காளர் வீட்டில் ரூ.10¼ லட்சம் நகை-பணம் திருட்டு
சிகாரிப்புராவில் காபி எஸ்டேட் கணக்காளர் வீட்டில் புகுந்து ரூ.10¼ லட்சம் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
சிவமொக்கா: சிகாரிப்புராவில் காபி எஸ்டேட் கணக்காளர் வீட்டில் புகுந்து ரூ.10¼ லட்சம் நகை-பணத்தை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த துணிகர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
காபி எஸ்டேட் கணக்காளர்
சிவமொக்கா மாவட்டம் சிகாரிப்புரா தாலுகா கோடிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மஞ்சுநாத். இவர் சிக்கமகளூரு மாவட்டம் பலேபைலு கிராமத்தில் உள்ள காபி எஸ்டேட்டில் தங்கி கணக்காளராக வேலை பார்த்து வருகிறார். மஞ்சுநாத்தின் மகன் கோடிஹள்ளியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்தான். மஞ்சுநாத் வாரம் ஒருமுறை கோடிஹள்ளிக்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி கோடிஹள்ளிக்கு வந்துவிட்டு வீட்டை பூட்டி விட்டு காபி எஸ்டேட்டுக்கு வேலைக்கு சென்றார். நேற்று முன்தினம் அவர் கோடிஹள்ளியில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.
ரூ.10¼ லட்சம் திருட்டு
அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது. இதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் மஞ்சுநாத் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த நகை-பணம் மாயமாகி இருந்தது. இதனால் யாரோ மர்மநபர்கள் வீட்டு கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகை-பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.
பீரோவில் இருந்து மொத்தம் ரூ.10.30 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் திருட்டு போயிருந்தது. இதுகுறித்து மஞ்சுநாத், சிராளகொப்பா போலீசில் புகார் கொடுத்தார்.
போலீஸ் வலைவீச்சு
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், சம்பவ இடத்துக்கு தடயவியல் நிபுணர்களை வரவழைத்தனர். அவர்கள் வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து கொண்டனர். இதுகுறித்து சிராளகொப்பா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story