சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.23 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Oct 2021 4:25 AM IST (Updated: 23 Oct 2021 4:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து விமானத்தில் இருந்து வந்து இறங்கிய பயணிகளை ஊழியர்கள் தீவிர சோதனை செய்தனர். அதில், எந்த பயணிகளிடமிருந்தும் தங்கம் எதுவும் சிக்காததால் அதிகாரிகள் குழப்பமடைந்தனர்.

அப்போது துபாய் விமானத்தின் ஒரு இருக்கையின் அடியில் 2 பார்சல்கள் இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு வந்த தகவல் தகவலையடுத்து, விமானத்திற்குள் விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்தின் பேரில், ஒரு இருக்கையின் அடியில் இருந்த பார்சலை எடுத்து பிரித்து பார்த்தனர். அந்த பார்சல்களில் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, ரூ.22 லட்சத்து 90 ஆயிரம் மதிப்புள்ள 470 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சுங்க இலாகா அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விமானத்தில் தங்கத்தை கடத்தி வந்த மர்ம நபர்கள் யார்? என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.


Next Story