பொள்ளாச்சி பகுதியில் 19,608 பேருக்கு கொரோனா தடுப்பூசி


பொள்ளாச்சி பகுதியில் 19,608 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 23 Oct 2021 9:22 PM IST (Updated: 23 Oct 2021 9:22 PM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி பகுதியில் 19,608 பேருக்கு கொரோனா தடுப்பூசி

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கிடையில் நகராட்சி பகுதியில் முகாம்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

வெறிச்சோடிய முகாம்

மத்திய, மாநில அரசுகளின் தடுப்பு நடவடிக்கையின் காரணமாக கொரோனா பரவல் கட்டுக்குள் உள்ளது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

 மேலும் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்தி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக சனிக்கிழமை சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் 20 மையங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி தொடங்கிவைத்து ஆய்வு செய்தார்.

 நகரில் பெரும்பாலான முகாம்களில் குறைவான நபர்களே தடுப்பூசி செலுத்தி கொண்டனர். இதன் காரணமாக நாச்சிமுத்து பிரசவ விடுதி உள்ளிட்ட பெரும்பாலான மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. நகரில் முகாம்களில் வெறிச்சோடி கிடந்தாலும், கிராமங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

19,608 பேருக்கு தடுப்பூசி

எஸ்.பொன்னாபுரம் உள்ளிட்ட சில மையங்களில் தடுப்பூசி தீர்ந்து போனது. பின்னர் மற்ற மையங்களில் இருந்து கூடுதலாக தடுப்பூசி பெறப்பட்டு, சிறப்பு முகாம் நடைபெற்றது. கிணத்துக்கடவு ஒன்றியத்தில் நடந்த முகாமை தாசில்தார் சசிரேகா, வட்டார மருத்துவ அலுவலர் சித்ரா ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். 

இதேபோன்று தெற்கு ஒன்றியத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராஜ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
பொள்ளாச்சி நகராட்சியில் 20 மையங்களில் 1,691 பேரும், வடக்கு ஒன்றியத்தில் 88 மையங்களில் 4,843 பேரும், தெற்கில் 52 மையங்களில் 3,822 பேரும், ஆனைமலையில் 85 மையங்களில் 4,252 பேரும், கிணத்துக்கடவில் 91 மையங்களில் பேரும் 5 ஆயிரம் பேரும் சேர்த்து மொத்தம் 19 ஆயிரத்து 608 பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டனர். 18 வயதிற்கு மேற்பட்ட நபர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்தி கொள்ள முன் வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story